எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு 18 ம் தேதி நேரு விளையாட்டு அரங்கில் நடைபெறும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
மருத்துவ படிப்புகளான எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் கடந்த 3ம் தேதி முதல் 12ம் தேதி வரை இனையதளம் மூலம் விநியோகிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று தரவரிசைப்பட்டியலை வெளியிட்டார்.
இதில், மாணவர்களிடம் இருந்து இதுவரை பெறப்பட்டுள்ள மொத்த விண்ணப்பங்கள் - 24,712 என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விண்ணப்பங்கள் - 23,707. நடப்பு கல்வியாண்டில் பயின்ற மாணவர்கள் - 9596. பழைய மாணவர்கள் - 14,111. இந்தாண்டு விண்ணப்பித்த மாணவர்களில் மாநில பாடத்தின் கீழ் பயின்றவர்கள் - 15,885 என்று விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிபிஎஸ்சி மாணவர்கள் - 7,366 விண்ணப்பித்துள்ளனர்.
சிறப்பு பிரிவினர்
முதல் நாள் சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. இதில் மாற்றுத்திறனாளிகள் 5 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு 80 விண்ணங்கள் பெறப்பட்டுள்ளது. விளையாட்டு வீரர்களுக்கு 412 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. மருத்துவ படிப்பில் 7 மற்றும் 1 பல் மருத்துவ இடங்களும் ஒதுக்கப்படும்.
முன்னாள் ராணுவ வீரர்கள் பிள்ளைகள் 448 பேர் விண்ணப்பித்துள்ளனர். எம்பிபிஎஸ் 10, பல் மருத்துவ இடம் 1 ஒதுக்கப்படும்.
7.5 சதவீத அரசு பள்ளி மாணவர்களுக்கான விவரம்
அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீடு 405 மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 313 எம்பிபிஎஸ், 92 பல் மருத்துவ இடங்கள் அடங்கும். இந்த இடங்களுக்கு மொத்தம் - 972 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 951 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன.
முதலிடம் - தேனியை சேர்ந்த ஜீவித் குமார் 664 நீட் மதிப்பெண் பெற்று முதலிடம், இரண்டாமிடம் - கள்ளக்குறிச்சியை சேர்ந்த அன்பரசன் 646 நீட் மதிப்பெண் பெற்று இரண்டாமிடம் பிடித்துள்ளார் சென்னையை சேர்ந்த திவ்யதர்சிணி என்ற மாணவி 620 நீட் மதிப்பெண் பெற்று மூன்றாமிடம் பெற்றார்.
இந்தாண்டு எம்பிபிஎஸ் படிப்புகளுக்கு 26 அரசு மருத்துவ கல்லூரிகளில் 3650 இடங்களும், 2 அரசு பல் மருத்துவ கல்லூரிகளுக்கு 192 இடங்களும் உள்ளன. மாநில ஒதுக்கீட்டிற்கு 3,032 எம்பிபிஎஸ் இடங்களும், 165 பல் மருத்துவ இடங்களும் உள்ளன. இந்த இடங்களில் 227 எம்பிபிஎஸ் இடங்கள் மற்றும் 12 பல் மருத்துவ இடங்கள் 7.5 சதவீத அரசு பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்கப்படுகிறது.
15 தனியார் கல்லூரிகளில் 1,147 இடங்களும், 18 பல் மமருத்துவ கல்லூரிகளில் 1,065 இடங்களும் அரசு ஒதுக்கீட்டிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த இடங்களில் 7.5 சதவீத உள் இட ஒதுக்கீடு 86 எம்பிபிஎஸ் இடங்களும், 80 பல் மருத்துவ இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: MBBS