தமிழகத்தில் ஜூலை 22-ம் தேதி பள்ளி, கல்லூரிகள் திறப்பா?

மாதிரி படம்

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் ஜூலை 20 ம் தேதி பிறகு திறக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

  • Share this:
தமிழ்நாட்டில் கொரோனா பரவல் இரண்டாவது அலை மிகத் தீவிரமாக தாக்குதலை ஏற்படுத்தியது. அதன் காரணமாக ஆக்ஸிஜன், மருத்துவமனை பற்றாக்குறை ஏற்படும் சூழல் ஏற்பட்டது. அதன்பிறகு தமிழக அரசு மேற்கொண்ட தீவிரமான நடவடிக்கையின் காரணமாக கொரோனா பரவல் கட்டுக்குள் வந்தது. நாள் ஒன்றுக்கு 35,000 பேர் வரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது நாள் ஒன்றுக்கு 2,500 பேர் வரை கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தினசரி குறைந்துவருகிறது.

தற்போது, கொரோனா தொற்று குறைந்துள்ள நிலையில் பல மாநிலங்களில் பள்ளிகள் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. புதுச்சேரியில் வரும் 16ஆம் தேதி முதல் 9 ம் வகுப்பு முதல் 12ஆம் வரையிலும் கல்லூரி வகுப்புகளும் தொடங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்திலும் பள்ளி கல்லூரிகள் திறப்பது குறித்து தமிழக அரசு தீவிரமாக ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 19ஆம் தேதியுடன் முடிகிறது. எனவே 20ஆம் தேதி அல்லது 22 ம் தேதி பள்ளி, கல்லூரிகள் திறப்பதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பள்ளிகளைப் பொறுத்தவரை பத்தாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரையான வகுப்புகள் முதலில் துவங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Published by:Karthick S
First published: