ஹோம் /நியூஸ் /கல்வி /

பொறியியல் படிப்பில் சேர கணிதம், இயற்பியல் கட்டாயமல்ல... புதிய நடைமுறை

பொறியியல் படிப்பில் சேர கணிதம், இயற்பியல் கட்டாயமல்ல... புதிய நடைமுறை

பொறியியல் படிப்பில் சேர கணிதம், இயற்பியல் கட்டாயமல்ல...  புதிய நடைமுறை

பொறியியல் படிப்பில் சேருவதற்கு கணிதம், வேதியியல், இயற்பியல் பாடங்கள் கட்டாயமில்லை என, அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் அறிவித்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

தற்போது நடைமுறையில் பி.இ., பி.டெக். ஆகிய பொறியியல் படிப்புகளில் சேருவதற்கு கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடங்கள் கட்டாயமாக உள்ளன. இந்நிலையில், பொறியியல் படிப்பில் சேருவதற்கான புதிய நடைமுறைகளை அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் புதிதாக வரையறுத்துள்ளது.

அதில் கணிதம், இயற்பியல், வேதியியில் பாடங்களை படிக்காதவர்களும் கூட பொறியியல் படிப்பில் சேரலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை வரும் 2021- 2022-ம் கல்வி ஆண்டு முதல் அமலுக்கு வருகிறது. அதன்படி, இயற்பியல், கணிதம், வேதியியல், கணினி அறிவியல், மின்னணுவியல், தகவல் தொழில்நுட்பம், உயிரியல்,  பயோ டெக்னாலஜி, வேளாண்மை, வணிகம், தொழில்முனைவு, தொழிற்கல்வி என 12 பாடங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. 12ஆம் வகுப்பில் இதில் ஏதாவது மூன்றை படித்திருந்தாலே பொறியியல் படிப்பில் சேரலாம்.

பொறியியல் படிப்புக்கு அடிப்படையான கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடங்களை 12ஆம் வகுப்பில் பயிலாதவர்கள்,  பொறியியல் படிப்பில் சேர்ந்த பிறகு அவற்றை, இணைப்பு பாடமாக தேர்வு செய்து படிக்கலாம் என்றும் அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் தெரிவித்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கு மாணவர்கள் ஆர்வம் காட்டாத சூழலில், இத்தகைய அறிவிப்பால் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை அதிகரிக்கும். பொறியியல் படிப்பு 4 ஆண்டுகளாக இருக்கும் சூழலில், ஓராண்டு, ஈராண்டிலேயே படிப்பை விட்டு நின்றால், புதிய கல்விக்கொள்கையின் படி திறன் சான்றிதழ் தரப்படும் என்றும், இந்திய தொழில்நுட்ப கவுன்சில் தெரிவித்துள்ளது.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: College, Education, Engineering