Home /News /education /

பொறியியல் கலந்தாய்வில் கலந்துகொள்வதைத் தவிர்த்த ஏராளமான மாணவர்கள்

பொறியியல் கலந்தாய்வில் கலந்துகொள்வதைத் தவிர்த்த ஏராளமான மாணவர்கள்

(கோப்புப் படம்)

(கோப்புப் படம்)

பொறியியல் கலந்தாய்வுக்கு ஏராளமானோர் விண்ணப்பித்த போதிலும் கலந்தாய்வில் அவர்களில் பலர் பங்கேற்கவில்லை. இரண்டு சுற்று பொறியியல் கலந்தாய்வுக்கு 35,000 மாணவர்கள் அழைக்கப்பட்டதில் 20,925 மாணவர்கள் மட்டுமே கல்லூரிகளை தேர்வு செய்துள்ளனர்.

மேலும் படிக்கவும் ...
  • News18
  • Last Updated :
    பொறியியல் கலந்தாய்வுக்கு பதிவு செய்துள்ள போதிலும் கடந்த ஆண்டினை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு ஏராளமான மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்கவில்லை என தெரியவந்துள்ளது. B.E மற்றும் B.tech ஆகிய இளநிலை பொறியியல் படிப்புகளுக்கான இரு சுற்று கலந்தாய்வு தற்போது நிறைவடைந்துள்ள நிலையில் அதற்காக அழைக்கப்பட்ட மாணவர்கள் பலர் பங்கேற்கவில்லை.

    முதல் கட்ட கலந்தாய்வில் 13,000 மாணவர்கள் அழைக்கப்பட்டதில் 7,510 மாணவர்கள் மட்டுமே பங்கேற்றனர். அதேபோல இரண்டாம் கட்ட கலந்தாய்விற்கு 22,000 மாணவர்கள் அழைக்கப்பட்டதில் 13,415 மாணவர்கள் மட்டுமே பங்கேற்றனர்.

    Also read... தனியார் பொறியியல் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீடு இடங்களை அரசிடம் ஒப்படைப்பதை நிறுத்த உத்தரவிட நீதிமன்றம் மறுப்பு



    இரண்டு சுற்று பொறியியல் கலந்தாய்வின் முடிவில் 35,000 மாணவர்கள் அழைக்கப்பட்டதில் 20,925 மாணவர்கள் மட்டுமே கல்லூரிகளை தேர்வு செய்துள்ளனர். இதனிடையே, இரண்டு சுற்று கலந்தாய்வின் போதும் கணினி அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகிய பாடங்களை மாணவர்கள் அதிக அளவில் தேர்ந்தெடுத்திருப்பதும்

    இரண்டு கட்ட பொறியியல் கலந்தாய்வு முடிவுற்ற நிலையில் 124 கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேர முன்வரவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.

    பொறியியல் படிப்பின் மீதான ஆர்வம் குறைந்தது இதற்கு காரணமில்லை என்றும், விரும்பிய கல்லூரி கிடைக்காத காரணத்தினாலேயே கலந்தாய்வை மாணவர்கள் தவிர்ப்பதாக கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர். இருப்பினும், 3 மற்றும் 4-வது கலந்தாய்வில் மாணவர்கள் வருகை சற்று அதிகரிக்கும் என நம்புவதாகவும் கல்வியாளர்கள் கூறுகின்றனர்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Anna University

    அடுத்த செய்தி