முகப்பு /செய்தி /கல்வி / UGC-NET தேர்வு மையத்தில் குளறுபடி; மதுரை மாணவிக்கு உதவிய எம்பி சு.வெங்கடேசன்

UGC-NET தேர்வு மையத்தில் குளறுபடி; மதுரை மாணவிக்கு உதவிய எம்பி சு.வெங்கடேசன்

மதுரை எம்பி சு வெங்கடேசன்

மதுரை எம்பி சு வெங்கடேசன்

இளநிலை ஆராய்ச்சி உதவித்தொகை தேர்வு (ஜே ஆர் எஃப்) மற்றும் உதவி பேராசிரியர் தகுதிக்கான யூஜிசி நெட் தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது.

  • Last Updated :
  • Madurai, India

தேசிய தேர்வு முகமை நடத்தும் யுஜிசி நெட் தேர்வுக்கு தேர்வு மையங்கள் பல்வேறு குளறுபடிகள் நடைபெற்றுள்ளதாக மதுரை எம்பி சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

இளநிலை ஆராய்ச்சி உதவித்தொகை தேர்வு (ஜே ஆர் எஃப்) மற்றும் உதவி பேராசிரியர் தகுதிக்கான யூஜிசி நெட் தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது. கொரோனா நோய்த் தொற்று காரணமாக நடத்தப்படாத 2021 டிசம்பர் மற்றும் 2022 ஜூன் தேர்வுடன் ஒருங்கிணைத்து இந்தாண்டு  மூன்று கட்டங்களாக நடைபெறுகிறது. இரண்டு  கட்டங்கள்  ஏற்கனவே முடிவுற்ற நிலையில், மூன்றாவது கட்டத் தேர்வு கடந்த செப்டமபர் 23 முதல் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், வரும் 13ம் தேதி நடைபெறும் ஆங்கில மொழி தேர்வுக்கு மதுரை மாணவிக்கு தேர்வு மையம் ஒதுக்கீடு செய்வதில் பல்வேறு குளறுபடிகள் நடைபெற்றுள்ளதை மதுரை எம்.பி சு.வெங்கடேசன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதுகுறித்து, அவர் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: UGC-NET தேர்வுக்கு விண்ணப்பித்த மதுரையைச் சேர்ந்த மாணவி ஒருவருக்கு நேற்று காலை தேர்வு எழுதும் நகரம் ஒதுக்கீடு செய்யப்பட்டு வந்த கடிதத்தில் “மதுரை” என்று இருந்தது. மாலையில் வந்த நுழைவுச்சீட்டில் தேர்வு மையம் கன்னியாகுமரி என்று மாற்றப்பட்டிருந்தது.

இதையும் வாசிக்கமுறைகேடாக தொலைதூரக் கல்வி சான்றிதழ் விவகாரம்: 3 அதிகாரிகள் பணியிடை நீக்கம்

top videos

    அதில் இருந்த கல்லூரியின் பெயரில் குமரி மாவட்டத்தில் எந்த கல்லூரியும் இல்லை. பிரச்சனையை மாணவி எனது கவனத்துக்கு கொண்டுவந்தார். உடன் தலையீடு செய்தேன். இரவுக்குள் தேர்வு மையம் மதுரைக்கு மாற்றப்பட்டு, புதிய நுழைவுச்சீட்டு மாணவிக்கு அனுப்பப்பட்டது. வேறுசில மாணவர்களுக்கும் இது போல் நடந்த குளறுபடிகள் சரிசெய்யப்பட்டன. இந்த மகிழ்வோடு தேர்வில் வெற்றிபெற மாணவர்களுக்கு வாழ்த்துகள்" என்று தெரிவித்தார்.

    First published:

    Tags: Su venkatesan, UGC