ஹோம் /நியூஸ் /கல்வி /

அரியர் மாணவர்களுக்கு இதுவே கடைசி வாய்ப்பு : சென்னை பல்கலைக்கழகம் அதிரடி

அரியர் மாணவர்களுக்கு இதுவே கடைசி வாய்ப்பு : சென்னை பல்கலைக்கழகம் அதிரடி

சென்னை பல்கலைக்கழகம்

சென்னை பல்கலைக்கழகம்

Arrear Exam: அரியர்  தேர்வெழுத தகுதியுடைய மாணவர்கள் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர் - சென்னை பல்கலைக்கழகம்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

சென்னைப் பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்ற கல்லூரிகளில் கடந்த 2015ம் ஆண்டு முதல் இளநிலை/ முதுநிலை படிப்புகளில் சேர்ந்து அரியர் தேர்வுகளை முடிக்காத மாணவர்களுக்கு, அவர்களின் படிப்பை முடிப்பதற்கு கடைசி வாய்ப்பாக ஏப்ரல்-நவம்பர் மாத செமஸ்டர் தேர்வுகளில் அனுமதியளிப்பதாக சென்னை பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில்,

2015-16 முதல் 2017-18 கல்வியாண்டில் சேர்ந்த மாணவர்களுக்கு 2022 ஏப்ரல், நவம்பர் மாதம் நடைபெறும் தேர்வுகளில் அனுமதியளிக்கப்படும். இது, அவர்களுக்கு கடைசி வாய்ப்பாக இருக்கும். அதேபோன்று, 2015-16 முதல் 2018-19 வரையிலான கல்வியாண்டில் சேர்ந்த முதுநிலை மாணவர்களுக்கு, 2022 ஏப்ரல் மாதத் தேர்வே இறுதி வாய்ப்பாக இருக்கும்.

www.unom.ac.in என்கிற இணையதள முகவரியில் மேலதிக விவரங்களை மாணவர்கள் அறிந்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, அரியர்  தேர்வெழுத தகுதியுடைய மாணவர்கள் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

நேரடி தேர்வுகள்: 

கொரோனோ தாக்கம் குறையத் தொடங்கியுள்ளதால், சென்னை பல்கலைக்கழகம் உள்பட மாநிலத்தின் அனைத்து  கல்லூரிகளிலும் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து வரும் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள செமஸ்டர் தேர்வினை மாணவர்களை நேரடியாக வரவழைத்து கொரொனோவிற்கு முந்தைய காலக்கட்டங்களை போல நேரடியாக தேர்வுகளை நடத்த சென்னை பல்கலைக்கழகம் முடிவெடுத்தது. அதன்படி, 2022 ஏப்ரல் செமஸ்டர் தேர்வு வரும் மே 12ம் தேதி முதல் தொடங்குகிகிறது.

AIIMS: பி.எஸ்சி நர்சிங் படிப்புக்கான அறிவிப்பு வெளியானது! முழு விவரம் உள்ளே

அந்த வகையில் சென்னை பல்கலைக்கழகம் மற்றும் அதன் இணைப்பு மற்றும் உறுப்புக் கல்லூரிகள் என நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகள் நேரடியாக செமஸ்டர் தேர்வுகளை நடத்த உள்ளது. சென்னை பல்கலைக்கழகத்தில் இணைப்புப் பெற்ற அனைத்துக் கல்லூரிகளும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றி நேரடியாக தேர்வுகளை நடத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சென்னை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் எஸ். கௌரி முன்னதாக தெரிவித்திருந்தார்.

பொதுப் பிரிவிலும், இடஒதுக்கீட்டுப் பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை உண்டு - உச்சநீதிமன்றம்

First published:

Tags: Madras University