சென்னைப் பல்கலை மற்றும் உறுப்புக் கல்லூரிகளில் இந்தாண்டு முதல் எம்.பில் படிப்பு நிறுத்தம்

சென்னைப் பல்கலைக்கழகம்

சென்னைப் பல்கலைக்கழகம் மற்றும் உறுப்புக் கல்லூரிகளில் எம்.பில் படிப்பு நிறுத்தப்படுகிறது.

  • Share this:
    சென்னைப் பல்கலைக்கழகத்தில் பயிற்றுவிக்கப்பட்டு வந்த எம்பில் பட்டப்படிப்பு 2021-22 ம் கல்வி ஆண்டு முதல் நிறுத்தப்படுகிறது என சென்னைப் பல்கலைக்கழக பதிவாளர் அறிவித்துள்ளார்.

    பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிமுறைகளின் படி எம்பில் பட்டப்படிப்பினை முடித்தவர்கள் கல்லூரிகளில் விரிவுரையாளர்களாக 2009 ம் ஆண்டு வரையில் பணியில் சேர அனுமதிக்கப்பட்டிருந்தனர். 2018-ம் ஆண்டில் பல்கலைக்கழக மானியக்குழு வழிகாட்டுத்தல் குழு, எம்பில் பட்டப்படிப்பை முடித்தவர்கள் கல்லூரிகளில் உதவிப்பேராசியராக சேர முடியாது எனவும் இந்தப் படிப்பினை இனிமேல் நடத்தக்கூடாது என தெரிவித்தது. பல்கலைக் கழக மானியக்குழுவின் 2018ம் ஆண்டின் புதிய விதிமுறைகளை தமிழக அரசும் ஏற்றுக் கொண்டுள்ளது. இதனால் எம்பில் முடித்தவர்கள் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணியில் இனிமேல் சேர முடியாது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்த நிலையில், சென்னைப் பல்கலைக்கழகப் பதிவாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னைப் பல்கலைக்கழகத்தில் 18-ம் தேதி நடைபெற்ற ஆட்சிமன்றக்குழுவின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, எம்.பில் பட்டப்படிப்பு 2021-22 ம் கல்வி ஆண்டு முதல் பல்கலைக்கழகத்தின் அனைத்து துறைகள் மற்றும் பல்கலைக்கழகத்தின் இணைப்புப் பெற்றக் கல்லூரிகளில் நிறுத்தப்படுகிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது.
    Published by:Karthick S
    First published: