முகப்பு /செய்தி /கல்வி / சென்னை பல்கலைக்கழக செமஸ்டர் முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிப்பு

சென்னை பல்கலைக்கழக செமஸ்டர் முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிப்பு

சென்னை பல்கலைக்கழகம்

சென்னை பல்கலைக்கழகம்

முதுகலை மாணவர்கள் நான்காவது செமஸ்டர் தேர்வில் ஒரு அரியர் வைத்திருந்தால் அவர்களுக்கும் உடனடியாக எழுத்து தேர்வு மற்றும் செய்முறை தேர்வு நடைபெறும். 

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai [Madras], India

சென்னை பல்கலைக்கழக இளங்கலை மற்றும் முதுகலை ஏப்ரல் மாதம் நடந்த செமஸ்டர் தேர்வுகளுக்கான முடிவுகள் வரும் செப்டம்பர் 1ம் தேதி இணையதளத்தில் வெளியிடப்படும் என சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பான அறிவிப்பில், 6து செமஸ்டரில் ஒரு தாள் மற்றும் அரியர் வைத்துள்ள இளநிலை மாணவர்களுக்கு உடனடி எழுத்து தேர்வு மற்றும் செய்முறை தேர்வுகள் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. முதுகலை மாணவர்கள் நான்காவது செமஸ்டர் தேர்வில் ஒரு அரியர் வைத்திருந்தால் அவர்களுக்கும் உடனடியாக எழுத்து தேர்வு மற்றும் செய்முறை தேர்வு நடைபெறும்.

இவர்கள் தாங்கள் பயின்று கல்லூரி வாயிலாக செப்டம்பர் 5ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை www.unom.ac.in என்கிற இணையதள முகவரியில் இளநிலை மாணவர்கள் உடனடி தேர்வுக்கான கட்டணமாக 300 ரூபாய் செலுத்தியும், முதுகலை மாணவர்கள் 350 ரூபாயும் எம்.பி.ஏ., எம்.எல். சட்டப்படிப்பு மாணவர்கள் 600 ரூபாயும் செலுத்த வேண்டும். சிறப்பு தேர்வு செப்டம்பர் 24ஆம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

B.com,bba மாணவர்களுக்கு சிறப்பு தேர்வு அடையாறில் உள்ள பெட்ரிசியன் கல்லூரியில் நடைபெறும். B.sc,B.A மாணவர்களுக்கு அடையாறில் உள்ள குமாரராணி மீனா முத்தையா கல்லூரியில் நடைபெறும். முதுகலை மாணவர்களுக்கான சிறப்பு தேர்வுகள் எம்ஜிஆர் ஜானகி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: RTE கீழ் தனியார் பள்ளிகளில் சேரும் மாணவர்களுக்கு அரசு செலுத்தும் கட்டணம் எவ்வளவு? கல்வித்துறை தகவல்

மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் செப்டம்பர் 5ம் தேதி முதல் 14 வரை www.unom.ac.in என்கிற இணையதள முகவரியில் கையெழுத்திட்டு 300ரூபாய் வரைவு காசோலையினை The Registrar university of madras என்கிற பெயரில் செப்டம்பர் 15ஆம் தேதிக்கு முன்னதாக சமர்ப்பிக்க வேண்டும் என்றும் சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது

First published:

Tags: Exam results, Madras University