Home /News /education /

சென்னை பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் வெளியீடு!

சென்னை பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் வெளியீடு!

சென்னைப் பல்கலைக்கழகம்

சென்னைப் பல்கலைக்கழகம்

Madras University results 2021 | இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளுக்கு கடந்த நவம்பர் மாதத்தில் நடைபெற்ற செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.

    சென்னை பல்கலைக்கழகத்தின் செமஸ்டர் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது.

    இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளுக்கு கடந்த நவம்பர் மாதத்தில் நடைபெற்ற செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியாகிறது.

    தேர்வு முடிவுகளை சென்னை பல்கலைகழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://result.unom.ac.in-ல் மற்றும் https://egovernance.unom.ac.in/results/  ஆகியவற்றில் தெரிந்துக்கொள்ளலாம் என்று பல்கலைகழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    எனினும், தேர்வு முடிவுகள் வெளியாகும் நேரம் குறித்து பல்கலைகழகம் அறிவிப்பில் எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. வழக்கமாக மாலை நேரத்தில் தேர்வு முடிவுகள் வெளியாகும். அதன்படி, இந்த முறையும் மாலையில் தேர்வு முடிவுகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Also Read : தனியார் பள்ளிகளுக்கு ஜப்தி நோட்டீஸ் - தமிழக அரசு அதிரடி நடவடிக்கை

    தேர்வு முடிவுகளை அதிகளவிலான மாணவர்கள் பார்க்கக்கூடும் என்பதால், மாணவர்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில், ஒன்றுக்கு மேற்பட்ட இணையதளங்களில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Exam results, Madras University

    அடுத்த செய்தி