ஹோம் /நியூஸ் /கல்வி /

சென்னை பல்கலைக்கழக இலவசக் கல்வி திட்டத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

சென்னை பல்கலைக்கழக இலவசக் கல்வி திட்டத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

சென்னைப் பல்கலைக்கழகம்

சென்னைப் பல்கலைக்கழகம்

பல்கலைக்கழக இணையதளத்தில் (www.unom.ac.in) பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் நாளில் இருந்து 15 நாட்களுக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்கு மிகாமல் இருக்கும் மாணவர்கள் இலவச கல்வி உதவி திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என்று சென்னைப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

  இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், ‘ஏழை எளிய மாணவர்கள் தடையின்றி இளங்கலை படிப்புகளில் சேர்ந்து பயன்பெறும் வகையில், சென்னை பல்கலைக்கழகம் கடந்த 2010-ம் ஆண்டு முதல் 'சென்னை பல்கலைக்கழக இலவசக் கல்வி திட்டம்' என்ற சிறப்பு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ், நடப்பு கல்வி ஆண்டில் (2022-2023) இணைப்பு கல்லூரிகளில் (அரசு உதவி பெறும் கல்லூரி மற்றும் சுயநிதி கல்லூரிகள்) சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

  பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள், பெற்றோரை இழந்த மாணவர்கள், குடும்பத்தில் பட்டப் படிப்புக்கு வரும் முதல் தலைமுறை மாணவர்கள் ஆகியோருக்கு இந்த திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படும்.

  அரியர் மாணவர்களுக்கு இதுவே கடைசி வாய்ப்பு : சென்னை பல்கலைக்கழகம் அதிரடி

  குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்கு மிகாமல் இருக்கும் மாணவர்கள் இந்த உதவித் திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம். இந்த படிப்பில் சேர இலவச கல்வி திட்ட விண்ணப்பத்தையும், அதில் குறிப்பிடப்பட்டுள்ள சான்றிதழ்களையும் பல்கலைக்கழக இணையதளத்தில் (www.unom.ac.in) பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் நாளில் இருந்து 15 நாட்களுக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

  JEE முதன்மை தேர்வுக்கான விண்ணப்ப செயல்முறை தொடங்கியது

  உரிய சான்றிதழ்களின் நகல்களை ஆன்லைன் மூலம் மட்டுமே பதிவேற்றம் செய்யவேண்டும். வேறு வகையில் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Published by:Salanraj R
  First published:

  Tags: Madras University