Home /News /education /

மின்சார வாகனங்கள் குறித்த பிரத்தியேக முதுகலை பட்டப்படிப்பு: சென்னை ஐஐடியில் அறிமுகம்

மின்சார வாகனங்கள் குறித்த பிரத்தியேக முதுகலை பட்டப்படிப்பு: சென்னை ஐஐடியில் அறிமுகம்

மின்சார வாகனம் குறித்த பட்டப்படிப்பு

மின்சார வாகனம் குறித்த பட்டப்படிப்பு

இளங்கலை B.tech பயிலும் மாணவர் தனது 3ம் ஆண்டு பட்டப்படிப்பின் இறுதியில்  மின்சார வாகனங்கள் குறித்து முதுகலை 2 ஆண்டு  பிரிவில் சேரலாம் அவ்வாறு இணைந்து படிக்கக்கூடிய மாணவர்களுக்கு இளங்கலை மற்றும் முதுகலை ஆகிய இரண்டு பட்டங்கள் வழங்கப்படும்.

மேலும் படிக்கவும் ...
மின்சார வாகனங்கள் பற்றிய முதுகலை படிப்பு சென்னை ஐ ஐ டியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி,  இளங்கலை பி டெக் பயிலும் மாணவர்கள் 3ம் ஆண்டு முடிவில்  அடுத்த  2 ஆண்டுகள் முதுகலையில் மின்சார வாகனங்கள் குறித்து படிக்கலாம்.

உலகம் முழுவதும் மின்சார வாகனங்களின் பயன்பாடு அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்தியாவிலும் அண்மைக்காலங்களில்   இருசக்கர மற்றும் நான்கு சக்கர மின்சார வாகனங்களின் பயன்பாடு அதிகரிக்க துவங்கியுள்ளது. தமிழகத்தின் ஓசூர் அருகே மின்சார ஸ்கூட்டர் தயாரிப்பு ஆலையை Athur energy, Ola ஆகிய நிறூவனங்கள் அமைத்து உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில்  வளர்ந்துவரும் மின்சார வாகன துறையின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு மின்சார வாகனங்கள் குறித்த பட்டப்படிப்பை முதுகலை பிரிவில் சென்னை ஐஐடி அறிமுகப்படுத்தியுள்ளது .அதன்படி மூன்றாம் ஆண்டு b.tech பயிலும் மாணவர் மூன்றாம் ஆண்டின்  இறுதியில் எலக்ட்ரிக் வாகனங்கள் குறித்த முதுகலை படிப்பில் தங்களை பதிவு செய்து கொள்ளலாம். இதன் மூலம் மாணவர்களுக்கு இளங்கலை மற்றும் முதுகலை என இரண்டு பட்டங்கள் வழங்கப்படும் என சென்னை ஐ ஐ டி தெரிவித்துள்ளது.

நடப்பு கல்வியாண்டில் இந்த மாதம் முதல் மின்சார வாகனங்கள் குறித்த இந்த பாடப்பிரிவில் மாணவர்கள் தங்களை இணைத்துக் கொள்ளலாம் என தெரிவித்துள்ள சென்னை ஐஐடி, இந்த ஆண்டு 25 மாணவர்களை மின்சார வாகனங்கள் குறித்த முதுகலை பிரிவில்  சேர்க்க முடிவு செய்துள்ளது.

இதையும் படிங்க: முதுகலை பொறியியல் கலந்தாய்வில் 18%  ஜிஎஸ்டி கட்டணம் கட்டாயம் - அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு


இதன்மூலம் வளர்ந்துவரும் மின்சார வாகன துறையில் மாணவர்களுக்கு ஏராளமான வேலைவாய்ப்புகள் உருவாகும் என ஐஐடி பேராசிரியர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

 
Published by:Murugesh M
First published:

Tags: Chennai IIT, Electric bike, IIT Madras

அடுத்த செய்தி