டியூசன் எடுக்கும் அரசு ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை: உயர் நீதிமன்றம் உத்தரவு!
டியூசன் எடுக்கும் அரசு ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை: உயர் நீதிமன்றம் உத்தரவு!
breaking
பள்ளி, கல்லூரி, மற்றும் பல்கலைகழகங்களில், சமீப காலமாக ஒழுங்கின்மை, சட்ட விரோத நடவடிக்கைகள், பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருவதை சுட்டிக்காட்டிய நீதிபதி, இது தொடர்பாக புகார் அளிக்க கட்டணமில்லா தொலைப்பேசி எண்ணை 8 வாரங்களுக்குள் அறிமுகப்படுத்த வேண்டும் என பள்ளிக்கல்வி துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.
டியூசன் எடுக்கும் அரசு பள்ளி ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், பள்ளி மற்றும் கல்லூரிகளில் நடக்கும் பாலியல் தொல்லை தொடர்பாக புகார் அளிக்க கட்டணமில்லா தொலைப்பேசி எண்ணை பள்ளிக்கல்வி துறை அறிமுகப்படுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது
கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட எஸ் ஆர் பி அம்மணி அம்மாள் மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ரெங்கநாதனை, 2 கிமீ தூரத்தில் உள்ள செல்வபுரத்தில் உள்ள மாநகராட்சி மேல்நிலை பள்ளிக்கு இடமாற்றம் செய்து மாநகராட்சி ஆணையர் கடந்த 2017 ஜூலையில் உத்தரவு பிறப்பித்தார்.
இந்த உத்தரவை ரத்து செய்ய கோரி தாக்கல் செய்த வழக்கை நீதிபதி எஸ் எம் சுப்பிரமணியம் விசாரித்தார். விசாரணையில், ஆர்.எஸ்.புரம் பள்ளிக்கு மாற்றம் கோரி மல்லிகா என்ற தலைமை ஆசிரியை அளித்த கோரிக்கையை ஏற்று, அப்பள்ளி தலைமை ஆசிரியர் ரங்கநாதன் இடமாற்றம் செய்யப்பட்டது தெரிய வந்தது.
2 கிமீ துரத்தில் உள்ள பள்ளிக்கு இடமாற்றம் செய்ததால் அவருக்கு எந்த பாதிப்பும் இல்லை என கூறி ரெங்கநாதனின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
அரசிடம் நியாயமான ஊதியம் பெறும் அரசு ஆசிரியர்கள், பண லாபத்திற்காக தனியாக டியூசன் எடுக்கிறார்கள். இது விதிமுறைகளுக்கு முரணானது. இதுபோல் தனியாக டியூசன் எடுக்கும் அரசு ஆசிரியர்களை கண்காணித்து கடும் நடவடிக்கை எடுக்க அரசுக்கு அறிவுறுத்தினார்.
ஆசிரியர்கள் அரசை மிரட்ட, போராட்டங்களில் ஈடுப்படுகின்றனர் என வேதனை தெரிவித்த நீதிபதி, இளைய சமுதாயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் இந்த ஆசிரியர்களின் மீது கருணை காட்டாமல் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
பள்ளி, கல்லூரி, மற்றும் பல்கலைகழகங்களில், சமீப காலமாக ஒழுங்கின்மை, சட்ட விரோத நடவடிக்கைகள், பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருவதை சுட்டிக்காட்டிய நீதிபதி, இது தொடர்பாக புகார் அளிக்க கட்டணமில்லா தொலைப்பேசி எண்ணை 8 வாரங்களுக்குள் அறிமுகப்படுத்த வேண்டும் என பள்ளிக்கல்வி துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்த தொலைப்பேசி எண்ணை அனைத்து கல்வி நிறுவனங்களின் அறிவிப்பு பலகையில் இடம்பெற செய்ய வேண்டும் எனவும், புகார் கிடைத்த 24 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்
தனியாக டியூசன் நடத்தும் அரசு ஆசிரியர்களுக்கு எதிராகவும் இந்த இலவச தொலைப்பேசி எண்களில் புகார் அளிக்கலாம் என குறிப்பிட்டுள்ள நீதிபதி அந்த ஆசிரியர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அனைத்து பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் சுற்றிறிக்கை அனுப்ப உத்தரவிட்டார்.
மேலும், வழக்கு தொடர்ந்த தலைமை ஆசிரியர் ரெங்கநாதன் மற்றும் தலைமை ஆசிரியர் மல்லிகா ஆகியோர் அவர்கள் பணிபுரியும் பள்ளி வளாகத்தில் 50 மரக்கன்றுகளை நட உத்தரவிட்டார்.
மரம் நட்டது தொடர்பாக கோவை மாநகர ஆணையர் அறிக்கை அளிக்க உத்தரவிட்டார்.
Also see...
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.