பள்ளி வாகனங்களில் ஜிபிஎஸ்: ஜூன் மாதத்திற்குள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

news18
Updated: May 15, 2019, 1:44 PM IST
பள்ளி வாகனங்களில் ஜிபிஎஸ்: ஜூன் மாதத்திற்குள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!
கோப்புப் படம்
news18
Updated: May 15, 2019, 1:44 PM IST
மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பள்ளி வாகனங்களில் ஜிபிஎஸ் மற்றும் சிசிடிவி கேமரா பொறுத்துவது தொடர்பாக தமிழக பள்ளிக்கல்வித்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை புரசைவாக்கத்தை சேர்ந்த கோபி கிருஷ்ணன் என்பவர் தொடர்ந்த பொதுநல வழக்கு நீதிபதிகள் கார்த்திகேயன் மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, கோவையில் பள்ளி வாகனத்தில் சென்ற மாணவி ஒருவரை வாகன ஓட்டுநர் மற்றும் அவரது உதவியாளர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தை சுட்டிக்காட்டிய மனுதாரர் தரப்பு, எதிர்காலத்தில் இது போன்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் அனைத்து பள்ளி வாகனங்களிலும் சிசிடிவி கேமரா மற்றும் ஜிபிஎஸ் கருவி பொருத்த வேண்டும் எனவும் மாணவர்களின் பயணத்தை பெற்றோர்கள் இணையதளம் மூலமாக கண்காணிக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் வாதிடப்பட்டது.

இதனை கேட்ட நீதிபதிகள், இது தொடர்பாக தமிழக பள்ளி கல்வித்துறை செயலாளர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜூன் மாதத்திற்கு ஒத்தி வைத்தனர்.

Also see...

First published: May 15, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...