அதிக கட்டணம் வசூலித்த கல்லூரிகள் பணத்தை மாணவர்களுக்கு திருப்பி கொடுக்க உத்தரவு!

மாணவர்களிடம் இருந்து  கூடுதலாக வசூலிக்கப்பட்ட கல்விக் கட்டணத் தொகையை இரண்டு கல்லூரிகளும் திருப்பிக் கொடுக்க வேண்டும் எனவும், அந்த கூடுதல் தொகையை அடுத்த கல்வியாண்டில் மாணவர்கள் செலுத்த வேண்டிய கல்வி கட்டணத்தில் கழித்துக் கொள்ளவேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

Web Desk | news18
Updated: July 19, 2019, 6:55 PM IST
அதிக கட்டணம் வசூலித்த கல்லூரிகள் பணத்தை மாணவர்களுக்கு திருப்பி கொடுக்க உத்தரவு!
சென்னை உயர்நீதிமன்றம்
Web Desk | news18
Updated: July 19, 2019, 6:55 PM IST
கட்டண நிர்ணயக் குழு நிர்ணயித்த கட்டணத்துக்கு அதிகமாக வசூலித்த தொகையை மாணவர்களுக்கு திருப்பி கொடுக்க வேண்டும் என புதுச்சேரி கல்லூரிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகள், மாணவர்களிடம் இருந்து எவ்வளவு கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பதை நிர்ணயம் செய்ய உயர் நீதிமன்ற ஓய்வுப்பெற்ற நீதிபதி எஸ்.ராஜேஸ்வரன் தலைமையில் கல்வி கட்டணம் நிர்ணயக்குழு உருவாக்கப்பட்டது.

இந்த குழு, கல்வி கட்டணத்தை நிர்ணயம் செய்து உத்தரவிட்டது. ஆனால், புதுச்சேரியில் உள்ள பாண்டிச்சேரி மருத்துவ அறிவியல் கல்வி நிறுவனம், ஸ்ரீ வெங்கடேஸ்வரா மருத்துவ கல்லூரி ஆகியவை நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிகம் தொகையை வசூலித்ததாக மாணவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.


இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுப்பையா, சி.சரவணன் அடங்கிய அமர்வு, மாணவர்களிடம் இருந்து  கூடுதலாக வசூலிக்கப்பட்ட கல்விக் கட்டணத் தொகையை இரண்டு கல்லூரிகளும் திருப்பிக் கொடுக்க வேண்டும் எனவும், அந்த கூடுதல் தொகையை அடுத்த கல்வியாண்டில் மாணவர்கள் செலுத்த வேண்டிய கல்வி கட்டணத்தில் கழித்துக் கொள்ளவேண்டும் எனவும் உத்தரவிட்டது.

Also see...

First published: July 19, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...