அரசு பள்ளிகளில் ஸ்போக்கன் இங்கிலீஷ் ஏன் கற்பிக்கக்கூடாது: நீதிமன்றம் கேள்வி

அனைத்து தமிழ்வழி பள்ளிகளிலும் ஸ்போக்கன் இங்கிலீஷ் வகுப்புகளை ஏன் நடத்தக் கூடாது என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இதுகுறித்து டிசம்பர் 6-ம் தேதிக்குள் பதில் அளிக்க உத்தரவிட்டனர்.

அரசு பள்ளிகளில் ஸ்போக்கன் இங்கிலீஷ் ஏன் கற்பிக்கக்கூடாது: நீதிமன்றம் கேள்வி
கோப்புப் படம்
  • News18
  • Last Updated: November 12, 2018, 8:04 PM IST
  • Share this:
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் ஸ்போக்கன் இங்கிலீஷ் வகுப்புகளை ஏன் நடத்தக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளளது.

அரசு பள்ளிகளில் தமிழ் வழிக் கல்வி பயிலும் மாணவர்களுக்கு போதிய ஆங்கிலப் புலமை இல்லாததால் போட்டித் தேர்வுகளை எதிர்கொள்வதில் மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். எனவே, தமிழ்வழிக் கல்வி கற்பிக்கும் அனைத்து பள்ளிகளிலும் ஸ்போக்கன் இங்கிலீஸ் வகுப்புகளை நடத்த உத்தரவிடக் கோரி திமுக அப்பாவு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி சத்தியநாராயணன் அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, போட்டி தேர்வுகளில் கேரளா, ஆந்திரா மாநிலங்கள் முன்னிலையில் உள்ளதாகவும், போதிய ஆங்கிலப் புலமை இல்லாமல் தமிழக மாணவர்கள் பாதிக்கப்படுவது வேதனை அளிப்பதாகவும் தெரிவித்தனர்.


திமுக தரப்பில் வழக்கு தொடரப்பட்டதால் இதனை அரசியலாக பார்க்காமல், இதன் முக்கியத்துவத்தை அரசு கருத்தில்கொள்ள வேண்டும் என நீதிபதிகள் அறிவுறுத்தினர். அனைத்து தமிழ்வழி பள்ளிகளிலும் ஸ்போக்கன் இங்கிலீஷ் வகுப்புகளை ஏன் நடத்தக் கூடாது என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இதுகுறித்து டிசம்பர் 6-ம் தேதிக்குள் பதில் அளிக்க உத்தரவிட்டனர்.

Also see...

First published: November 12, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்