மாணவர்களிடம் புத்தக பை வாங்கும்படி தனியார் பள்ளிகள் வற்புறுத்தக் கூடாது!

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் பரிந்துரைத்த 450 ரூபாய் மதிப்பிலான புத்தகங்களுக்கு பதிலாக 5,000 ரூபாய் மதிப்பிலான ஆக்ஸ்போர்டு மற்றும் கேம்பிரிட்ஜ் புத்தகங்களை பள்ளி நிர்வாகம் வழங்குவதாகவும், இதனால், நடுத்தர பெற்றோர் பாதிக்கப்படுவதாகவும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

மாணவர்களிடம் புத்தக பை வாங்கும்படி தனியார் பள்ளிகள் வற்புறுத்தக் கூடாது!
கோப்புப் படம்
  • News18
  • Last Updated: May 19, 2019, 10:57 AM IST
  • Share this:
மாணவர்களிடம் புத்தக பை, லஞ்ச் பேக் போன்ற பொருட்களை வாங்கும்படி தனியார் பள்ளி நிர்வாகம் வற்புறுத்தக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவையில் செயல்பட்டு வரும் மாதா அமிர்தானந்த மயி அறக்கட்டளைக்கு சொந்தமான பள்ளியில் பாட புத்தகங்களுக்கு 5 ,000 ரூபாயும், சீருடை, காலணி, புத்தகப் பை, மதிய உணவு எடுத்துசெல்லும் பைகளுக்கு என 5,000 ரூபாய் செலுத்தக் கூறி பள்ளி நிர்வாகம் தரப்பில் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இதனை எதிர்த்து பெற்றோர் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நீதிபதி கார்த்திகேயன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.


அப்போது தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் பரிந்துரைத்த 450 ரூபாய் மதிப்பிலான புத்தகங்களுக்கு பதிலாக 5,000 ரூபாய் மதிப்பிலான ஆக்ஸ்போர்டு மற்றும் கேம்பிரிட்ஜ் புத்தகங்களை பள்ளி நிர்வாகம் வழங்குவதாகவும், இதனால், நடுத்தர பெற்றோர் பாதிக்கப்படுவதாகவும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இதனைக் கேட்ட நீதிபதி, மாணவர்களுக்கு தேவையான பாடப்புத்தகங்கள், சீருடைகள், காலணிகளை பள்ளி நிர்வாகம் விற்பனை செய்யலாம் என்றும், ஆனால் பிற பொருட்களை வாங்கும்படி பெற்றோரை நிர்பந்திக்கக் கூடாது என்றும் உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 10-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Also see...
First published: May 19, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்