கோர்ட்டில் மன்னிப்பு கேட்ட உயர்கல்வி துறை செயலாளர்!

தலைசிறந்த கவிஞரின் பெயரை தாங்கியுள்ள பல்கலைக்கழகத்தில் அவரது பெயருக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலான செயல்கள் தொடர்ந்து நடந்து வருவதாக வேதனை தெரிவித்த நீதிபதி, பல்கலைக்கழகத்தின் மாண்பை மீட்டெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

கோர்ட்டில் மன்னிப்பு கேட்ட உயர்கல்வி துறை செயலாளர்!
சென்னை உயர்நீதிமன்றம்
  • News18
  • Last Updated: January 8, 2019, 5:29 PM IST
  • Share this:
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உயர்கல்வி துறை செயலாளர் மங்கத் ராம் சர்மா சென்னை உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியதை அடுத்து அவருக்கு எதிரான கைது வாரண்டை திரும்ப பெற்றது சென்னை உயர் நீதிமன்றம்.

கோவை, பாரதியார் பல்கலைக் கழகம் தொலைதூர கல்வி மையங்கள் துவங்க தடை விதித்து உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மீறி, தொலைதூர கல்வி மையங்களில் மாணவர் சேர்க்கை நடத்த அனுமதியளித்து, பல்கலைக் கழக சிண்டிகேட் குழு நவம்பர் 28-ம் தேதி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது,

இதையடுத்து, உயர் கல்வித் துறை அதிகாரிகள் பல்கலைக்கழகத்துக்கு எதிராக தனியார் சுயநிதி கலை, அறிவியல் கல்லூரிகள் சங்கம் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.


இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், உயர்கல்வித்துறை செயலாளர் மங்கத்ராம் சர்மா, கல்லூரி கல்வி இயக்குனர் ஆர்.சாருமதி, மருத்துவ கல்வி இயக்குனர் எட்வின் ஜோ, தொழில்நுட்ப கல்வி இயக்குனர் விவேகானந்தன், சிண்டிகேட் உறுப்பினர்களும், பேராசிரியர்களுமான சிங்காரவேலு, ஜெயக்குமார், சரவணக்குமார், ரவிச்சந்திரன், சின்னதுரை
ஆகிய எட்டு பேரையும் ஜனவரி 7ம் தேதி நேரில் ஆஜராகும்படி உத்தரவிட்டார்.

நேற்று, இந்த வழக்கு நீதிபதி கிருபாகரன் முன் விசாரணைக்கு வந்தபோது, உயர்கல்வித்துறை செயலாளர் மங்கத் ராம் ஷர்மா மட்டும் ஆஜராகவில்லை. இதையடுத்து, அவரை கைது செய்து ஜனவரி 9ம் தேதி ஆஜர்படுத்த சென்னை மாநகர காவல் ஆணையருக்கு உத்தரவிட்டு, வழக்கை தள்ளிவைத்தார்.இந்நிலையில் இன்று நீதிமன்றத்தில் நேரில் ஆஜரான மங்கத் ராம் சர்மா, நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாகவும், தனக்கு எதிரான கைது வாரண்ட்டை திரும்ப பெற வேண்டும் என மனுவில் கூறியுள்ளார்.

இதை ஏற்று கைது வாரண்டை திரும்பப் பெற்ற நீதிபதி, பாரதியார் பல்கலைக்கழக சிண்டிகேட் நடவடிக்கைகளை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஜனவரி 24க்கு தள்ளிவைத்தார்.

தொலைதூர கல்வி மையங்கள் துவங்க பல்கலைக்கழக விதிகள் தடை விதித்த போதும், அதை மீறி செயல்படும் பல்கலைக்கழகத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்காதது ஏன் என பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு கேள்வி எழுப்பினார்.

தலைசிறந்த கவிஞரின் பெயரை தாங்கியுள்ள பல்கலைக்கழகத்தில் அவரது பெயருக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலான செயல்கள் தொடர்ந்து நடந்து வருவதாக வேதனை தெரிவித்த நீதிபதி, பல்கலைக்கழகத்தின் மாண்பை மீட்டெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

தமிழகத்தில் ஏராளமான கல்வி நிறுவனங்கள் இருந்தாலும் தரமான கல்வி வழங்கப்படவில்லை என நீதிபதி வேதனை தெரிவித்தார்.

Also see...

First published: January 8, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்