• HOME
  • »
  • NEWS
  • »
  • education
  • »
  • தமிழகத்தில் 7 புதிய மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் - மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் 7 புதிய மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் - மா.சுப்பிரமணியன்

மா.சுப்பிரமணியன்

மா.சுப்பிரமணியன்

தமிழ்நாட்டில் 7 புதிய மருத்துவக்கல்லூரிகளில் நடப்பு ஆண்டில் 850 மாணவர் சேர்க்கை நடத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

  • Share this:
தமிழ்நாட்டில் 7 புதிய மருத்துவக் கல்லூரிகளில் நடப்பு ஆண்டில் 850 மாணவர் சேர்க்கை நடத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்திருப்பதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

பட்ஜெட் கூட்டத்தொடரில் வெளியிட்ட அறிவிப்பின்படி “கலைஞரின் வருமுன் காப்போம்” திட்டம் சேலம் மாவட்டம் வாழப்பாடியில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். இந்த திட்டம் குறித்து விளக்குவதற்காக சென்னை எழும்பூரில் உள்ள மருத்துவ பணிகள் கழகத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது, 2006 ஆம் ஆண்டு வருமுன் காப்போம் திட்டத்தை முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தொடங்கி வைத்ததாகவும், அடுத்து ஆட்சிக்கு வந்த அரசு இந்த திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தவில்லை என்றும் கூறினார். பத்து ஆண்டுகளாக தவிர்க்கப்பட்ட வருமுன் கப்பம் திட்டம் மீண்டும் நாளை தொடங்கப்படுவதாகவும், இந்த திட்டத்தின் மூலம் தமிழ்நாடு முழுவதும் ஆண்டுக்கு 1240 முகாம்கள் அமைக்கப்படும் எனவும் கூறினார்.

பொது, அறுவை சிகிச்சை, குழந்தை, மகப்பேறு என 16 சிறப்பு மருத்துவர்கள் இந்த முகாம்களில் பங்கேற்பார்கள் என்ற விளக்கத்தையும் மா.சுப்பிரமணியன் அளித்தார், மேலும் தமிழ்நாட்டில் உள்ள புதிய மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்சேர்க்கை நடத்த அனுமதி கோரி வலியுறுத்தி வந்த நிலையில் 7 கல்லூரிகளில் நடப்பாண்டே மாணவர் சேர்க்கை நடத்துவதற்கான அனுமதியை மத்திய அரசு வழங்கியிருப்பதாகவும் தெரிவித்தார்.

அதன்படி, விருதுநகர், கள்ளக்குறிச்சி, ஊட்டி ஆகிய மருத்துவக்கல்லூரிகளில் தலா 150 மாணவர் சேர்க்கையும், நாமக்கல், திருப்பூர், ராமநாதபுரம், திருவள்ளூர் ஆகிய மருத்துவ கல்லூரிகளில் தலா 100 மாணவர் சேர்க்கையும் மொத்தமாக 850 மாணவர் சேர்க்கை இந்த ஆண்டே தொடங்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

மீதமுள்ள 4 மருத்துவ கல்லூரிகள் உள்ள சிறு குறைபாடுகளை களைந்து மாணவர் சேர்க்கை நடத்துவதற்கான அனுமதியை மத்திய அரசிடம் இருந்து பெறுவோம் எனவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

Must Read : 1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு எப்போது? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை

மேலும், வரும் ஞாயிற்றுக்கிழமை மெகா தடுப்பூசி முகாம் நடைபெறாது. வழக்கமாக தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Suresh V
First published: