Home /News /education /

LKG, UKG பள்ளிகளை திறக்க முதல்வர் ஸ்டாலின் அனுமதி!

LKG, UKG பள்ளிகளை திறக்க முதல்வர் ஸ்டாலின் அனுமதி!

சமுதாய, கலாச்சார மற்றும் அரசியல் கூட்டங்கள் போன்ற பொது மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கும் உள்ள தடை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமுதாய, கலாச்சார மற்றும் அரசியல் கூட்டங்கள் போன்ற பொது மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கும் உள்ள தடை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமுதாய, கலாச்சார மற்றும் அரசியல் கூட்டங்கள் போன்ற பொது மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கும் உள்ள தடை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் நர்சரி பள்ளிகள் (LKG, UKG) மற்றும் மழைலையர் விளையாட்டுப் பள்ளிகளை திறக்க அனுமதித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

    தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருந்தது. இத்துடன் பள்ளிகள், கல்லூரிகளும் மூடப்பட்டிருந்தன. இந்நிலையில், பிப்.1ம் தேதி முதல் பள்ளிகளை மீண்டும் திறக்கலாம் என முதல்வர் அறிவித்திருந்தார்.

    அதன்படி, பிப்.1ம் தேதி முதல் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி அனைத்து பள்ளிகளிலும் பயிலும் 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கின.

    எனினும், அந்த உத்தரவில் மழலையர் விளையாட்டு பள்ளிகள் (Play Schools), நர்சரி பள்ளிகள் (LKG, UKG) செயல்பட அனுமதி அளிக்கப்படவில்லை. இதன் காரணமாக மழலையர், நர்சரி பள்ளிகள் மட்டும் திறக்கப்படாமல் இருந்தன.

    இதையும் படிங்க - இந்த மூன்றை தவிர கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் வாபஸ் - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

    இந்நிலையில், ஊரடங்கு கட்டுப்பாடுகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், பிப்.16 முதல் நர்சரி பள்ளிகள் (LKG, UKG) மற்றும் மழைலையர் விளையாட்டுப் பள்ளிகள் (Play Schools) திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

    மேலும், தமிழ்நாட்டில் தொடர்ந்து தொற்றுப் பரவலை கட்டுக்குள் வைத்திடவும், குறைத்திடவும் பின்வரும் கட்டுப்பாடுகள் மட்டும் 16-2-2022 முதல் 2-3-2022 வரை நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, சமுதாய, கலாச்சார மற்றும் அரசியல் கூட்டங்கள் போன்ற பொது மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கும் உள்ள தடை தொடரும்.

    திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்வுகள் அதிகபட்சம் 200 நபர்களுடன் மட்டும் நடத்த அனுமதிக்கப்படும்.

    3. இறப்பு சார்ந்த நிகழ்வுகள் 100 நபர்களுக்கு மிகாமல் அனுமதிக்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: LKG, UKG

    அடுத்த செய்தி