அரசுப் பள்ளிகளில் L.K.G, U.K.G வகுப்புகள் தொடர்ந்து இயங்கும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் எல்கேஜி யுகேஜி வகுப்புகள் மூடப்படுவதாக கடந்த பிப்ரவரி மாதம் நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சி செய்தி வெளியிட்டிருந்தது. இதனையடுத்து, பள்ளிகள் வரும் ஜூன் 13ந் தேதி தொடங்க உள்ள நிலையில் எல்கேஜி யுகேஜி வகுப்புகளில் மாணவர் சேர்க்கை மேற்கொள்ளப்படவில்லை என்றும் இதனால் எல்கேஜி யுகேஜி வகுப்புகள் மூடப்படுவதை பள்ளிக்கல்வித்துறை உறுதிப்படுத்தியது.
இந்த நிலையில் நேற்று தொடக்க கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பில் தொடக்கக்கல்வி துறையில் பயில்கின்ற மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்க போதிய ஆசிரியர்கள் இல்லை என்றும் தொடக்க கல்வித்துறைக்கு 9 ஆயிரம் ஆசிரியர்கள் தேவை இருப்பதாகவும் இதன் காரணமாகவே எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகள் மூடப்பட்டதாக விளக்கம் அளித்திருந்தது. நேற்று இந்த அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில் தற்போது எல்கேஜி யுகேஜி வகுப்புகள் செயல்படும் என்றும் அதற்கு ஏற்ப ஆசிரியர்கள் விரைவில் நியமிக்கப்படுவார் என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.
பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழ்நாட்டில் 2,381 அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளுக்குள் அமைந்த அங்கன்வாடி மையங்கள் பரிசோதனை அடிப்படையில் L.K.G., U.K.G., வகுப்புகளாக மாற்றப்பட்டு, சில ஆண்டுகளாக நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.
முந்தைய ஆட்சிக் காலத்தில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையின் எண்ணிக்கை மிகவும் குறைந்திருந்த காரணத்தால், கூடுதல் எண்ணிக்கையில் இருந்த ஆசிரியர்கள் L.K.G., U.K.G., வகுப்புகளை எடுக்க அனுப்பி வைக்கப்பட்டிருந்ததாக தெரிவித்துள்ள அமைச்சர்
அரசுப் பள்ளிகளின் தரம் கடந்த ஓராண்டாக அரசு எடுத்து வரும் பல்வேறு சிறப்பு முயற்சிகளின் காரணமாக, அதிகரித்து சுமார் 7 இலட்சம் மாணவர்கள் கடந்த கல்வியாண்டில் மட்டும் மாநிலம் முழுவதுமுள்ள பல்வேறு அரசுப் பள்ளிகளில் பல்வேறு வகுப்புகளில் புதிதாக சேர்ந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக, அரசுப் பள்ளிகளில் கூடுதலாக கடந்த கல்வியாண்டில் 3,000 வகுப்புகள் (Sections) தொடங்கப்பட்டதாக தெரிவித்துள்ள அமைச்சர்
அதிகமான எண்ணிக்கையிலான மாணவர் சேர்க்கையினால் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்களின் தேவை அதிகரித்ததையடுத்து, L.K.G., U.K.G., வகுப்புகளில் பாடம் எடுக்க அனுப்பி வைக்கப்பட்டிருந்த ஆசிரியர்கள், பணி மாறுதல் வாயிலாக 1 முதல் 5 வகுப்புகளுக்கு ஆசிரியர்களாக அண்மையில் சென்றதாகவும் இருப்பினும், சம்பந்தப்பட்ட அங்கன்வாடி மையங்களில் குழந்தைகள் தொடர்ந்து அவர்களது கல்வியினை தங்கு தடையின்றி பெற அனைத்து நடவடிக்கைகளும் அரசால் எடுக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிகாட்டியுள்ளார்.
L.K.G., U.K.G., வகுப்புகளை அரசுப் பள்ளிகளில் தொடர்ந்து நடத்திட வேண்டும் என பல்வேறு தரப்பினரிடமிருந்தும் வரப்பெற்ற கோரிக்கையினை ஏற்று, , அரசுப் பள்ளிகளில் L.K.G., U.K.G., வகுப்புகள் தொடர்ந்து நடைபெற பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளதாகவும் . இதற்கென தகுதியான சிறப்பாசிரியர்கள் தேவையான இடங்களில் நியமிக்கப்படுவார்கள் என்றும் அறிக்கையில் தெரிவித்துள்ளார்..
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Anbil Mahesh Poyyamozhi, Department of School Education, Governemnt primary schools, LKG