ஹோம் /நியூஸ் /கல்வி /

புதுச்சேரியில் இன்று முதல் எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகள் தொடக்கம்..

புதுச்சேரியில் இன்று முதல் எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகள் தொடக்கம்..

 மாதிரிப்படம்

மாதிரிப்படம்

Puducherry : புதுச்சேரியில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு எல்.கே.ஜி மற்றும் யு.கே.ஜி. வகுப்புகள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளன.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  புதுச்சேரியில் கொரோனா தொற்று குறைந்துள்ளதால், இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இன்று முதல் 2021–22 ஆம் கல்வி ஆண்டுக்கான மழலையர் பள்ளிகள் (எல்.கே.ஜி மற்றும் யு.கே.ஜி.) கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி இன்று முதல் திறக்கப்பட்டுள்ளன.

  புதுச்சேரி அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை ஆண்டுதோறும் குறைந்து வந்தது. இதனால், அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க, மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. தனியார் பள்ளிகளில்தான் மழலையர் வகுப்புகள் (LKG, UKG) நடத்தப்பட்டு வந்தது. எனவே, தனியார் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்கும் பெற்றோர் தொடர்ச்சியாக அதே பள்ளியில் படிக்க வைப்பதும் தெரியவந்தது.

  இந்நிலையில், அரசு பள்ளிகளில் மழலையர் (எல்.கே.ஜி, யு.கே.ஜி) வகுப்புகளை தொடங்கினால் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கலாம் என கருத்து தெரிவிக்கப்பட்டது. அதன்படி, சில ஆண்டுக்கு முன்னர் அரசின் தொடக்கப்பள்ளி, நடுநிலைப் பள்ளிகளில் முன் மழலையர் வகுப்புகள் தொடங்கப்பட்டன. நகர்ப் புறத்தில் அதிகளவிலும், கிராமப்புறங்களில் ஒரு சில பள்ளிகளிலும் இத்தகைய வகுப்புகள் தொடங்கப்பட்டன. தொடர்ந்து அடுத்தடுத்த ஆண்டுகளில் பெரும்பாலான அரசு பள்ளிகளில் இந்த வகுப்புகள் தொடங்கப்பட்டன. இதனால் ஆங்காங்கே ஆசிரியர் பற்றாக்குறை நிலவியது.

  அதனைத் தொடர்ந்து, கடந்த காங்கிரஸ் ஆட்சியின்போது, குழந்தைகள் பராமரிப்பில் டிப்ளமோ முடித்தவர்கள் இதற்காக தேர்வு செய்யப்பட்டனர். அதன்படி 148 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இதற்கிடையில், கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியதால் பள்ளிகள் மூடப்பட்டன. அதனைத் தொடர்ந்து புதுச்சேரிக்கு சட்டமன்ற தேர்தல் வந்தது. இதனால் தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு பணி ஆணை வழங்கப்படாமல் நிலுவையில் இருந்து வந்தது.

  Read More : பொ.மல்லாபுரம் திமுக நிர்வாகிகள் 5 பேர் கட்சியில் இருந்து அதிரடி நீக்கம்

  இந்நிலையில், கொரோனா பரவல் குறைந்ததால் இன்று முதல் புதுச்சேரி அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி மற்றும் யு.கே.ஜி. வகுப்புகள் தொடங்கப்படுகிறது. எனவே, ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட 148 ஆசிரியர்களுக்கு கடந்த 12ஆம் தேதி பணி ஆணை வழங்கப்பட்டது.

  Must Read : புதிய தேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு சிறப்பாக அமல்படுத்தி வருகிறது - பாலகுருசாமி

  அதன்படி, இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இன்று முதல் 2021–22 ஆம் கல்வி ஆண்டுக்கான மழலையர் பள்ளிகள் (எல்.கே.ஜி மற்றும் யு.கே.ஜி.) கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி திறக்கப்பட்டுள்ளன.

  Published by:Suresh V
  First published:

  Tags: LKG, Puducherry, School, UKG