Home /News /education /

சத்துணவுத் திட்டத்தில் ஆதார்: 5 வயதுக்கப்பட்ட குழந்தைகளில் 70% பேரிடம் ஆதார் இல்லை

சத்துணவுத் திட்டத்தில் ஆதார்: 5 வயதுக்கப்பட்ட குழந்தைகளில் 70% பேரிடம் ஆதார் இல்லை

காட்சிப் படம்

காட்சிப் படம்

5 வயதுக்கு உட்பட்ட 11,47,12,650 குழந்தைகளில், 2022 ஜூன் 30-ந் தேதி வரை 3,16,70,612 குழந்தைகளுக்கு ஆதார் எண்கள் வழங்கப்பட்டுள்ளன.

    ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் உள்ள துணை உணவுச் சத்துணவுத் திட்டத்தில் பலன் பெற ஆதார் எண் அவசியம் என்று மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    முன்னதாக, கேரளா மாநிலதின் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலங்களவை உறுப்பினர் பினாய் விஸ்வம் மாநிலங்களையில் கேள்வி ஒன்று எழுப்பினார். அதில், துணை ஊட்டச்சத்து திட்டத்திற்கு ஆதார் அட்டையை இணைக்க வேண்டிய அவசியம் என்ன? இந்த நடைமுறையால் நாட்டின் 70% குழந்தைகள் பயனாளியாக பதிவு செய்ய முடியாது என்பதை அமைச்சகம் அறியுமா? 6 வயதுக்குட்பட்டவர்களில் ஆதார் அட்டை வைத்திருக்கும் குழந்தைகளின்  எண்ணிக்கை என்ன? 2018 ல் தற்போது வரை கண்டறியப்பட்ட  போலி பயனாளிகளின் எண்ணிக்கை என்ன? போன்ற கேள்விகளை எழுப்பினார்.

    இதற்கு, மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி ஜூபின் இரானி நேற்று மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் , "

    அங்கன்வாடி மையங்களில் வழங்கப்படும் துணை ஊட்டச்சத்து திட்டம் இந்திய தொகுப்பு நிதியிலிருந்து மேற்கொள்ளப்படும் தொடர் செலவினங்களை உள்ளடக்கியது. எனவே, ஆதார் சட்டம், 2016 பிரிவு-7 இன் விதிகளின்படி, அமைச்சகம் துணை ஊட்டச்சத்து திட்டத்தை அறிவித்தது. திட்டத்தின் டிஜிட்டல் மயமாக்கல், பயனாளிகளை அடையாளம் காண அமைச்சகத்திற்கு உதவும்.

    ஆதார் எண் இல்லாததால், எந்தக்குழந்தையும் கூடுதல் ஊட்டச்சத்து கிடைக்காமல் இருக்கக்கூடாது என்ற அடிப்படையில், தாயின் ஆதார் அட்டையைப் பயன்படுத்தி இதன் பயன்களை பெறுவதற்கு அணுகலாம்.

    5 வயதுக்கு உட்பட்ட 11,47,12,650 குழந்தைகளில், 2022 ஜூன் 30-ந் தேதி வரை 3,16,70,612 குழந்தைகளுக்கு ஆதார் எண்கள் வழங்கப்பட்டுள்ளன.

    இவ்வாறு, அமைச்சர் தனது பதிலில் தெரிவித்தார்.

    துணை ஊட்டச்சத்து திட்டம் என்றால் என்ன? 

    குழந்தைகள், கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட உணவின் அளவு (Recommendary Dietary Allowance) மற்றும் சராசரி  உணவு  உட்கொள்ளல் (Average Daily Intake) ஆகியவற்றிற்கு இடையே உள்ள இடைவெளியைக் குறைப்பதற்காக  துணை ஊட்டச்சத்து திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் உள்ள ஆறு சேவைகளில் ஒன்றான இது தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஒரு உரிமையாக மாற்றப்பட்டது.

    6 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள்  மற்றும் பாலூட்டும்  தாய்மார்கள் என அனைவரும் சேவைகளைப் பெற தகுதியுடையவர்கள் ஆவார்கள். வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் மட்டுமே ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் வேண்டும் கீழ் பயனாளிகளாகப் பதிவு செய்திட என்ற அளவுகோல் இல்லை. இத்திட்டம் அனைத்து வகைப் பயனாளிகளுக்கும் பொதுவானது.
    Published by:Salanraj R
    First published:

    Tags: Aadhar

    அடுத்த செய்தி