ஹோம் /நியூஸ் /கல்வி /

ஆசிரியர் பட்டய படிப்புத் தேர்வில் 10% பேர் கூட தேர்ச்சி பெறவில்லை

ஆசிரியர் பட்டய படிப்புத் தேர்வில் 10% பேர் கூட தேர்ச்சி பெறவில்லை

காட்சிப் படம்

காட்சிப் படம்

Diploma in Elementary education Exam Pass percentage: 2022 செப்டம்பரில் நடைபெற்ற முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான தேர்வில் தேர்வெழுதிய 1036 பேரில் வெறும் 65 பேர் மட்டுமே தேர்சி பெற்றுள்ளனர்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஆசிரியர் பட்டய படிப்புகளில் 10 சதவீதம் மாணவர்கள் கூட தேர்ச்சி அடைவதில்லை என்கிற அதிர்ச்சி தகவல் வெளியாக இருக்கின்றது

1 முதல் 5 வரையிலான துவக்க நிலை வகுப்புகளை எடுக்க ஆசிரியர் பட்டய படிப்பு எனப்படுகின்ற D.E E படிப்பு கற்பிக்கப்படுகிறது. 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஆசிரியர் பட்டய படிப்புகளுக்கு மிகுந்த வரவேற்பு இருந்தது. படிப்படியாக அந்நிலை மாறி இன்று அதன் நிலை கவலைக்குரியதாக உள்ளது.

இதனை உறுதி செய்கிறது ஆண்டுதோறும் ஆசிரியர் பட்டயப்படிப்பு தேர்வில் தேர்சி பெறுபவர்களின் எண்ணிக்கை. 2022 செப்டம்பரில் நடைபெற்ற முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான தேர்வில் தேர்வெழுதிய 1036 பேரில் வெறும் 65 பேர் மட்டுமே தேர்சி பெற்றுள்ளனர்.

இதையும் வாசிக்கதீபாவளிக்கு அடுத்த நாள் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுமா? மாணவர்கள், பெற்றோர் எதிர்பார்ப்பு

அதேபோல 2 ஆம் ஆண்டினை பொருத்தவரை பட்டையபடிப்பு கல்லூரிகள் வாயிலாக மற்றும் தனித்தேர்வர்களாக மொத்தம் தேர்வெழுதிய 5604 பேரில் 385 பேர் மட்டுமே தேர்சி பெற்றுள்ளனர். இவர்களின் தேர்சி விகிதம் முறையே 3.93% மற்றும் 7.69 % ஆகும் . அந்த வகையில் ஆசிரியர் பட்டயப்படிப்பு தேர்வில் தேர்சி சதவிகிதம் 10 சதவிலல்கிதம் கூட இல்லை.

Published by:Salanraj R
First published:

Tags: Exam, School Teacher