ஹோம் /நியூஸ் /கல்வி /

பி.இ., பி.டெக் இரண்டாம் ஆண்டு சேர்க்கைக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

பி.இ., பி.டெக் இரண்டாம் ஆண்டு சேர்க்கைக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

அண்ணா பல்கலைக்கழகம்

அண்ணா பல்கலைக்கழகம்

முதன்முறையாக அண்ணா பல்கலைக்கழகத்திலும் நேரடி 2-ம் ஆண்டு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  Direct Second Year B.E / B.Tech Admissions-2022:  பி.இ., பி.டெக் படிப்புகளில் நேரடி இரண்டாம் ஆண்டு சேர்க்கைக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்று  தொழில்நுட்பக் கல்வி இயக்கம் தெரிவித்துள்ளது.

  நாளை முதல் ஜூலை 23 வரை www.tnlea.com / www.accet.co.in / www.accetedu.in ஆகிய இணையதளங்களில் விண்ணப்பிக்கலாம்

  டிப்ளமோ பட்டயப்படிப்பு அல்லது பிஎஸ்சி பட்டப் படிப்பு தேர்ச்சி பெற்று முடித்தவர்கள்  நேரடி இரண்டாமாண்டு பி.இ. படிப்புக்கு விண்ணப்பிக்கலாம். மாநிலத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும், சுயநிதி பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழக வளாகம், அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளில் சேர்க்கை பெற விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பங்கள் அனைத்தும் இணையதளம் மூலமாக மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டும். முதன்முறையாக அண்ணா பல்கலைக்கழகத்திலும் நேரடி 2-ம் ஆண்டு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. 

  இதையும் வாசிக்க: IBPS Vacancies Updated: பிராந்திய ஊரக வங்கிகளில் உள்ள காலி பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு 

  www.accet.co.in,www.accet.edu.in, www.accetlea.com ஆகிய இணையதளங்கள் வாயிலாக மட்டுமே விண்ணப்பங்கள் பெறப்படும். தேவைப்படும் அனைத்து ஆவணங்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

  நாளை முதல் விண்ணப்பப் பதிவு நடைமுறைகள் தொடங்கும். ஜூலை 23 தேதியுடன் சேவைகள் நிறுத்தப்படும்.  விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு கலந்தாய்வு மூலம் இடங்கள் ஒதுக்கப்படும்.

  Published by:Salanraj R
  First published:

  Tags: Anna University