ஹோம் /நியூஸ் /கல்வி /

அரசு பள்ளி மாணவர்களுக்கான உதவித்தொகை திட்டம்: விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு!

அரசு பள்ளி மாணவர்களுக்கான உதவித்தொகை திட்டம்: விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு!

பள்ளி மாணவர்கள்

பள்ளி மாணவர்கள்

இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவித்தொகை, மாணவர்களின் வங்கி கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்பட்டுவிடும். இந்த திட்டம் நூறுசதவீதம் மத்திய அரசால் செயல்படுத்தப்படுகிறது - மத்தியக் கல்வி அமைச்சகம்

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu |

  தேசிய அளவிலான தகுதி மற்றும் திறமையான மாணவர்களுக்கான உதவித்தொகை (National Means cum Merit Scholarship scheme) திட்டத்திற்கான காலக்கெடு வரும் அக்டோபர் 15-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.   

  பொருளாதாரத்தில் நலிவடைந்த திறமையான மாணவர்கள் பள்ளிப்படிப்பை பாதியிலேயே நிறுத்தாமல், மீண்டும் கல்வியைத் தொடர ஊக்குவிப்பதற்காக இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஒவ்வோர் ஆண்டும் சுமார் 1 லட்சம் புதிய மாணவர்களுக்கு  உதவித் தொகை  வழங்கப்பட்டு  வருகிறது.

  அடிப்படைத் தகுதிகள்: இந்த உதவித்தொகையை பெறுவதற்கு தகுதியான மாணவர்களின் பெற்றோர்களின் ஆண்டு வருமானம் ரூ.3,50,000-த்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். உதவித்தொகையை பெறுவதற்கான தேர்வில் 7-ம் வகுப்பு அல்லது அதற்கு இணையான வகுப்பில் மாணவர்கள் குறைந்தபட்சம் 55 சதவீதம் பெற்றிருக்க வேண்டும். மேலும் எஸ்சி/எஸ்டி மாணவர்களுக்கு 5 சதவீதம் மதிப்பெண்கள் தளர்த்தப்பட்டிருக்கிறது.

  தேர்வு முறை:  அந்தந்த மாநில அரசுத் தேர்வுகள் இயக்ககத்தால், தேசிய வருவாய் வழி மற்றும் தகுதி படிப்பு உதவித் தொகை (National Means cum merit scholarship) பெறுவதற்கான தேர்வு நடத்தப்படுகிறது. இதில், பெறும் மதிப்பெண்கள் அடிப்படையிலும், இட ஒதுக்கீட்டின் அடிப்படையிலும் மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

  மத்திய / மாநில அரசுப் பள்ளிகள் / அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஏழாம் வகுப்பில் தேர்ச்சி பெற்று எட்டாம் வகுப்பில் பயிலும் இத்தேர்விற்கு தகுதியானவர்கள்.  தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.12,000/- உதவித்தொகையாக ஒன்பதாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை வழங்கப்படும்.

  இதையும் வாசிக்க: சிறுபான்மை மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை: 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்

  இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவித்தொகை, மாணவர்களின் வங்கி கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்பட்டுவிடும். இந்த திட்டம் நூறுசதவீதம் மத்திய அரசால் செயல்படுத்தப்படுகிறது.

  விண்ணப்பம் செய்வது எப்படி? www.scholarship.gov.in என்ற தேசிய கல்வி உதவித் தொகை இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

  தேவைப்படும் ஆவணங்கள்:

  பாஸ் போர்ட் அளவு புகைப்படம்;

  வருமானச் சான்றிதழ்;

  ஆதார் எண்;

  வங்கிக் கணக்கு எண் மற்றும் IFSC Code;

  புதுப்பிக்க, முந்தைய ஆண்டு இறுதித் தேர்வு மதிப்பெண்  சான்றிதழ்

  National Means Cum Merit Scholarship  வழிகாட்டு நெறிமுறைகள்

  இதுதொடர்பாக அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளுக்கான  பதில்களை தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்!

  Published by:Salanraj R
  First published:

  Tags: Scholarship