ஊரடங்கு காலத்தில் மொழி அறிவு, கணித அறிவை இழந்த குழந்தைகள்!

மாதிரிப் படம்

பள்ளி மூடப்பட்டுள்ள கடந்த 16-17 மாதங்களால்  அவர்கள் இழந்துள்ளது அந்த குறிப்பட்ட காலத்திற்கான அறிவை மட்டுமல்ல. இத்தனை ஆண்டுகளாக அவர்கள் கற்றதையும் மறந்துள்ளனர். 

 • Share this:
  கொரோனா காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த ஊரடங்கு காலத்தில் குழந்தைகள் அவர்களின் மொழியறிவு, கணித அறிவு போன்றவற்றை அதிகம் இழந்துள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

  கொரோனா பெருந்தொற்று காரணமாக இந்தியாவில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.  ஒருசில பள்ளிகள்  ஆன்லைன் மூலம் குழந்தைகளுக்கு வகுப்புகளை எடுத்து வருகின்றன. எனினும், பள்ளிகளுக்கு சென்று  பயிலும் சூழல் இல்லாததால் குழந்தைகளுக்கு கல்வி அறிவு குறைந்து வருவதாக பெற்றோர்கள் ஆதங்கப்படுகின்றனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இந்நிலையில்,  அசிம் பிரேம்ஜி அறக்கட்டளை பள்ளிக் குழந்தைகளிடம் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது.  16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர்.  இதில் 92 சதவீத குழந்தைகள் தங்கள் மொழிப்பட அறிவை இழந்துள்ளதும் 82 சதவீத குழந்தைகள் கணித அறிவை இழந்துள்ளதும் தெரியவந்தூள்ளது.

  இது தொடர்பாக நியூஸ் 18 ஊடகத்துக்கு பேட்டியளித்துள்ள அசிம் பிரேம்ஜி அறக்கட்டளையின் தலைமை நிர்வாக இயக்குநர்  அனுராக் பேஹர்,  திட்டமிடலுடன் பள்ளிகளை உடனடியாக திறக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இதேபோல், மாணவர்களின் இடைநிற்றல் அதிகரித்துள்ளதாகவும், அவர்கள் வேலைக்கு அனுப்பப்பட்டிருக்கலாம் என தான் அஞ்சுவதாகவும் கூறியுள்ள அவர், இதனை தடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.  ’கொரோனா காரணமாக பொருளாதார அழுத்தம் ஒவ்வொரு குடும்பத்திலும் ஏற்பட்டுள்ளது. எனவே, பள்ளிகள் திறக்கப்பட்டாலும் இடைநிற்றல் செய்த மாணவர்கள் மீண்டும் பள்ளிக்கு திரும்புவார்களா என்பது சந்தேகமே.  எனவே, பள்ளிகள் திறக்கப்பட்டதும் மாணவர்கள் அனைவரும் பள்ளிக்கு வருவதை நாம் உறுதி செய்ய வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

  Must Read: 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பாடப் பகுதிகள் குறைப்பு: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு


  மேலும், ஆன்லைன் கல்வி என்பது பயனற்றது. இந்தியாவில் பெரும்பாலான குழந்தைகளிடம் ஆன்லைன் கல்வி பயில்வதற்கான சாதனங்கள் கிடையாது. 20 கோடிக்கும் அதிகமான பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஆன்லைன் கல்வியை கற்பதற்கான வளங்கள் கிடைக்கவில்லை.

  இரண்டாவது பிரச்சினை இடம். பல குடும்பங்களில், பலர் ஒரே அறையைப் பகிர்ந்து கொள்கிறார்கள். இதேபோல், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு சமூக தொடர்பு என்பது கல்விக்கான அடிப்படையாகும். எனவே, ஆன்லைன் வகுப்புகள் பயனற்றதாகவே உள்ளதாக அனுராக் பேஹர் தெரிவித்துள்ளார்.

  மேலும் படிக்க: சட்டங்களில் தெளிவு இல்லை- உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி வேதனை


  ஊரடங்கு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டபோது 4ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த ஒரு மாணவன் தற்போது மீண்டும் பள்ளி திறப்பட்டால் நேரடியாக 6ம் வகுப்புக்கு செல்வார். 5ம் வகுப்பு பாடங்களை அவர் படித்திருப்பார் என்று கூற முடியாது. இதேபோல் பள்ளி மூடப்பட்டுள்ள கடந்த 16-17 மாதங்களால்  அவர்கள் இழந்துள்ளது அந்த குறிப்பட்ட காலத்திற்கான அறிவை மட்டுமல்ல. இத்தனை ஆண்டுகளாக அவர்கள் கற்றதையும் மறந்துள்ளனர்.


  இதையும் படிங்க: தமிழகத்திற்கு தனி கல்விக் கொள்கை!


  இந்த காலத்தில் 92 சதவீத குழந்தைகள் தங்கள் மொழிப்பட அறிவை இழந்துள்ளதும் 82 சதவீத குழந்தைகள் கணித அறிவை இழந்துள்ளதும் ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.  86 சதவீதம் குழந்தைகள் கணிதத்தின் அடிப்படைகளை மறந்துள்ளனர். எனவே பள்ளிகள் திறக்கப்படும்போது 20 முதல் 21 கோடி மாணவர்கள் வரை கல்வி குறைபாடோடு பள்ளிகளுக்கு வரக் கூடும். இதனை சரி செய்ய திட்டமிடல் அவசியம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
  Published by:Murugesh M
  First published: