முகப்பு /செய்தி /கல்வி / நீட் தேர்வு மையத்தில் மோசமாக நடத்தப்பட்ட பெண் தேர்வர்களுக்கு மற்றொரு வாய்ப்பு: என்டிஏ

நீட் தேர்வு மையத்தில் மோசமாக நடத்தப்பட்ட பெண் தேர்வர்களுக்கு மற்றொரு வாய்ப்பு: என்டிஏ

காட்சிப் படம்

காட்சிப் படம்

Kerala NEET 2022 Frisking Row: பெண் தேர்வர்களின் குற்றச்சாட்டை பள்ளி நிர்வாகம் மறுத்தது. மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணின் குற்றச்சாட்டு  மிதமிஞ்சிய இருப்பதாக தேசிய தேர்வு முகமை முன்னதாக தெரிவித்திருந்தது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Kerala, India

நீட் தேர்வு மைய அதிகாரிகளால் மோசமாக நடத்தப்பட்ட பெண் தேர்வர்களுக்கு இன்னுமொரு வாய்ப்பு வழங்கப்படும் என்று  தேசிய தேர்வு முகமை முடிவெடுத்துள்ளது. அதன்படி, செப்டம்பர் மாதம் 3ம் தேதி கேரளா மாநிலம் கொல்லம் தேர்வு மையத்தில் தேர்வெழுதிய 100 பெண் தேர்வர்களுக்கு மட்டும் மீண்டும் ஒருமுறை நீட் நுழைவுத் தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளநிலை மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான நீட் தகுதி தேர்வு கடந்த மாதம் 17ல் நடைபெற்றது. நாடு முழுவதும் உள்ள 497 நகரங்களில் 3,570 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெற்றது. 18 லட்சத்திற்கும் மேற்பட்ட தேர்வர்கள் இதில் கலந்து கொண்டனர்.

தேர்வர்கள் தேர்வு மையத்தினுள் நுழையும் முன்பு உயர் உணர்திறன் கொண்ட உலோக உணர்வி பயன்படுத்தி விரிவான கட்டாய சோதனைக்குட்படுத்தப்பட்டார்கள். அதே போன்று, மூடப்பட்ட அறையில் பெண் அலுவலர்களைக் கொண்டு பெண் தேர்வர்கள் சோதனைக்கு செய்யப்படுவார்கள்.

மேலும், பெண் தேர்வர்களை சோதனைகள் மேற்கொள்வதில் ஏற்படும் உணர்ச்சி சிக்கலை அறிந்து, தேர்வு மையத்தில் சோதனையில் ஈடுபடும் பெண் அலுவலர் மற்றும் அதிகாரிகளுக்கு விரிவான அறிவுரைகள் வழங்கப்படும்.

இதையும் வாசிக்க: நீட் சேர்க்கை முறை குறித்து தெரிந்து கொள்ள வேண்டிய 10 முக்கிய விஷயங்கள்

ஆனால், கேரளாவில் கொல்லம் மாவட்டம், மார்தோமா உயர்கல்வி நிறுவனத்தில் அமைந்துள்ள தேர்வு மையத்தில் தேர்வெழுத சென்ற பெண் தேர்வர்களை அங்குள்ள பெண் சோதனை அலுவலர்கள் மிக மோசமான முறையில்  நடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

பாதிக்கப்பட்ட பெண் தேர்வர் ஒருவர் இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் மனுவை அளித்தார். அதில், "தேர்வுக்கு முன்பாக மேல் உள்ளாடையை கழட்ட நிரபந்திக்கப்பட்டதாகவும், தேர்வை எழுதுவதற்கு முன்பாகவே உள ரீதியான, உணர்வு ரீதியான பிரச்னை கொடுக்கப்பட்டதாகவும், மன அதிர்வுகளை உணர்ந்ததாகவும்" தெரிவித்தார்.

இருப்பினும், பெண் தேர்வர்களின் குற்றச்சாட்டை பள்ளி நிர்வாகம் மறுத்தது. பாதிக்கப்பட்ட பெண்ணின் குற்றச்சாட்டு  மிதமிஞ்சிய இருப்பதாக தேசிய தேர்வு முகமை முன்னதாக தெரிவித்திருந்ததது. இது தொடர்பான வழக்கை விசாரித்து வரும் கேரளா உயர்நீதிமன்றம்,பெண் தேர்வர்களை சோதனை மேற்கொண்டது  தொடர்பான விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று தேசிய தேர்வு முகமை முகாமைக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், இன்று கொல்லம் தேர்வு மையத்தில் தேர்வெழுதிய பெண் தேர்வர்களுக்கு இன்னுமொரு வாய்ப்பு வழங்கப்படும் என்று  தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

First published:

Tags: Neet, Neet Exam, NEET Result