கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மாணவர் சேர்க்கை இன்று தொடங்கப்பட்டுள்ள நிலையில், சில மாற்றங்களை பள்ளி நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.
மத்திய கல்வி அமைச்சகத்தின் கேந்திரிய வித்யாலயா, பள்ளிகள் நாடு முழுவதும் செயல்படுகின்றன. ராணுவத்தினர், மத்திய, மாநில அரசின் அலுவலர், ஊழியர்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனத்தினர் ஆகியோரின் பிள்ளைகளுக்கு, முன்னுரிமை அளித்து, இந்த கல்வி நிறுவனத்தில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. மீதமுள்ள இடங்கள் மற்றவர்களுக்கு ஒதுக்கப்படும்.
இந்த பள்ளிகளில், 1ம் வகுப்பில் மாணவர்களை சேர்க்கும் போது அந்த ஆண்டு மார்ச், 31 அல்லது ஏப் 1ல், 5 வயது நிறைந்திருக்க வேண்டும் என்ற விதி, பல ஆண்டுகளாக உள்ளது.
இந்நிலையில் வரும், 2022- 23ம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், 1ம் வகுப்பில் சேரும் மாணவர்கள், புதிய கல்வி கொள்கையின்படி, 6 வயதாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.
இதையும் படிங்க -
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான வயது வரம்பு அதிகரிப்பு! அதிர்ச்சியில் பெற்றோர்..
kvsonlineadmission.kvs.gov.in. என்ற இணையதளத்தில் பெற்றோர் ஆன்லைனில் சேர்க்கைகாக பதிவு செய்து கொள்ளலாம். இன்று காலை தொடங்கப்பட்ட இந்த ஆன்லைன் பதிவு மார்ச் 21, 2022 இரவு 7 மணி வரை செயல்பாட்டில் இருக்கும்.
மார்ச் 31-ம்தேதியன்று 6 வயது உடையதாக முதலாம் வகுப்பில் சேர்க்கப்படும் குழந்தை இருக்க வேண்டும். ஏப்ரல் 1ம் தேதி குழந்தைக்கு 6 வயது ஆகிறது என்றாலும் பள்ளியில் சேர்க்கலாம்.
சுய தொழில் செய்வோர், தனியார் துறையில் பணியாற்றுவோரும் தங்களுக்குரிய பகுதியில் கேந்திரிய வித்யாலயாவில் பிள்ளைகளை சேர்க்கலாம். இருப்பினும் முன்னுரிமை அடிப்படையில்தான் பள்ளியில் சேர்க்கை நடைபெறும்.
இதையும் படிங்க -
கல்லூரிகளில் ஆன்லைன் பட்டபடிப்புக்கு யூஜிசி அனுமதி.. நேரடி படிப்புக்கு இணையானது என அறிவிப்பு
ஒரு பிள்ளைக்காக பல விண்ணப்பங்களை அளித்தால், கடைசியாக அளிக்கப்படும் விண்ணப்பம் மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
1-ம் வகுப்பு சேர்க்கைக்கான ஆவணங்கள்.
1. குழந்தையின் ஸ்கேன் செய்யப்பட்ட புகைப்படம்
2. பிறப்பு சான்றிதழ்
3. இருப்பிட சான்றிதழ்
4. அரசு வழங்கிய EWS சான்றிதழ்
5. வகுப்பு சான்றிதழ்
6. PwD சான்றிதழ்
7. ஓய்வுபெற்ற ராணுவத்தினரின் ஆவணங்கள்
மாணவர் சேர்க்கைப் பட்டியல் மூன்று கட்டங்களாக மார்ச் 25, ஏப்ரல் 1 மற்றும் ஏப்ரல் 8 ஆகிய தினங்களில் வெளியிடப்படும்.
விண்ணப்பிப்பது எப்படி?
1. kvsonlineadmission.kvs.gov.in என்ற இணைய தளத்திற்கு செல்லுங்கள்.
2. லாக் இன் செய்யுங்கள்.
3. கேட்கப்படும் விபரங்களை பூர்த்தி செய்யுங்கள்
4. தேவையான ஆவணங்களை பதிவேற்றுங்கள்
5. எல்லாம் சரிபார்த்த பின்னர் Submit பட்டனை க்ளிக் செய்யங்கள்
6. பின்னாள் தேவைக்காக நீங்கள் அளித்த படிவத்தை பிரின்ட் அவுட் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
கூடுதல் விபரங்கள் மற்றும் மாணவர் சேர்க்கை விண்ணப்பங்களை kvsangathan.nic.in/ என்ற இணையதளத்திலும், ஆன்லைன் பதிவு விபரங்களை, kvsonlineadmission.kvs.gov.in என்ற இணையதளத்திலும் தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.