தமிழகத்தில் சிறந்த பல்கலைக்கழகமாக பாரதிதாசன் பல்கலைக்கழகம் தேர்வு செய்யப்பட்டு, நியூஸ் 18 கற்றல் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டு உள்ளது. இதுபோல் பல்வேறு சிறந்த கல்வி நிறுவனங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன
அறிவுசார் சமூகத்தை உருவாக்கும் உயர்கல்வி நிறுவனங்களை கவுரவப்படுத்தும் நோக்கில், - நியூஸ் 18 தமிழ்நாடு சார்பில் கற்றல் விருதுகள் . இரண்டாவது ஆண்டாக வழங்கப்பட்டன, இவ்விழா, சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில், நடைபெற்றது. இதில், புதுமையான முறையில் புவியியல் ரீதியாகவும், துறை ரீதியாகவும் பிரித்து மொத்தம் 23 பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்பட்டன.
இந்திய அளவில் சிறந்த விளங்கும் பல்கலைக்கழகங்களில் ஒன்றாக திகழும், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம், தமிழகத்தின் சிறந்த பல்கலைக்கழகத்திற்கான கற்றல் விருதை தட்டிச்சென்றது. இவ்விருதை, உயர்கல்வி அமைச்சர் பொன்முடியிடம் இருந்து, பல்கலை. துணை வேந்தர் செல்வம் மற்றும் பதிவாளர் கணேசன் பெற்றுக்கொண்டனர்.
தென் தமிழகத்தில் வளர்ந்து வரும் பல்கலைக்கழகத்திற்கான விருது , திருச்சியில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்திற்கு வழங்கப்பட்டது. தமிழ்நாட்டின் சிறந்த கடல்சார் பல்கலைக்கழகமாக சென்னை AMET தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டது.
இதையும் படிக்க: 12ம் வகுப்பில் தேர்ச்சியா.... தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் விண்ணப்பிக்கலாம்
அத்துடன், துணை மருத்துவக் கல்விப் பிரிவில் சேலம் விநாயகா மிஷன்ஸ் பல்கலைக்கழகம் விருதினை வென்றது. சிறந்த மல்டி ஸ்ட்ரீம் பல்கலைக்கழகத்துக்கான விருதை, சென்னை பாரத் உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் பெற்றது.
பொறியியல் படிப்பில் நவீன உட்கட்டமைப்பு மற்றும் திறமையான மாணவர்களை உருவாக்கி, அவர்களுக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்த வகையில் சிறந்த பொறியியல் கல்லூரியாக மதுரை தியாகராஜர் கல்லூரியும், சேலம் நரசுஸ் சாரதி கல்லூரியும் தேர்வாகி விருதை வென்றன.
தென் தமிழகத்தில் சிறந்த பொறியியல் கல்வி நிறுவனமாக ஸ்கேட் குழுமத்தை சேர்ந்த நெல்லை பிரான்சிஸ் சேவியர் கல்லூரிக்கும் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. சிறந்த கலை, அறிவியல் கல்லூரிகளை பொறுத்தவரை சென்னையில் சிறந்த கலை. அறிவியல் கல்லூரியாக மகளிர் கிறிஸ்தவ கல்லூரியும், வடக்கு மண்டலத்தில் வேலூரில் உள்ள ஊரிஸ் கல்லூரியும் தேர்வு செய்யப்பட்டன.
மேலும் படிக்க: 10,12ம் வகுப்பு மாணவர்களுக்கு அரசு தேர்வுகள் இயக்ககம் முக்கிய அறிவிப்பு
தமிழகத்தில் சிறந்த கலை, அறிவியல் கல்லூரிக்கான விருது கோவை ஸ்ரீராமகிருஷ்ணா கல்லூரிக்கு வழங்கப்பட்டது. அத்துடன், சிறந்த தன்னாட்சி கலை, அறிவியல் கல்லூரிகளில் தென்மண்டலத்தில் மதுரை லேடி டோக் கல்லூரியும், டெல்டா மாவட்டங்களில் தஞ்சாவூர் மாவட்டம் பூண்டியில் உள்ள AVVM ஸ்ரீபுஷ்பம் கல்லூரியும், மயிலாடுதுறை AVC கல்லூரியும், மேற்கு மண்டலத்தில் கோவை அரசுக் கல்லூரியும் தேர்வு செய்யப்பட்டு, நியூஸ் 18 தமிழ்நாடு கற்றல் விருதுகள் வழங்கப்பட்டன.
அத்துடன், தமிழகத்தின் சிறந்த கல்வி குழுமத்திற்கான விருது, கோவையில் உள்ள ரத்தினம் கல்வி குழுமமும், மேற்கு மண்டலத்தின் ஊரகப் பகுதியில் சிறந்த கல்விக் குழுமமாக, நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உள்ள முத்தாயம்மாள் கல்விக் குழுமமும் பெற்றன. புதுச்சேரியில் சிறந்த மருத்துவ கல்லூரியாக ஸ்ரீலட்சுமி நாராயணா மருத்துவ கல்லூரியும் மேற்கு மண்டலத்தில் சிறந்த செவிலியர் கல்லூரியாக கோவை சேரன்ஸ் நர்சிங் கல்லூரியும் தேர்வு செய்யப்பட்டு கற்றல் விருது வழங்கப்பட்டது.
இதை படிக்க: திருமணம் ஆகாத ஆண்கள் அக்னிபத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம்- இந்திய விமானப் படை
சமுதாயத் தொடர்புக்கான சிறந்த கல்வி நிறுவனமாக, சென்னையில் உள்ள மீனாட்சி உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி அகாடமி நிகர்நிலைப் பல்க்லைக்கழகம் தேர்வு செய்யப்பட்டது. தென் தமிழகத்தின் வளர்ந்து வரும் சிறந்த தனியார் வேளாண்மை கல்லூரியாக, திருச்சியில் உள்ள MIT வேளாண்மை கல்லூரி விருதை வென்றது. சிறந்த ஹோட்டல் மேனேஜ்மென்ட் நிறுவனமாக காஞ்சிபுரத்தில் உள்ள எஸ்.ஆர்.எம். நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது.
23 விருதுகள் தவிர்த்து, சென்னையில் உள்ள மத்திய காலணி தயாரிப்பு பயிற்சி நிறுனத்திற்கு, சிறப்புப் பிரிவில் கற்றல் விருது வங்கி கவுரவிக்கப்பட்டது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Katral Awards 2022