Home /News /education /

இந்துக்களின் உணர்வுகள் புண்படுகிறது : மறைந்த தலித் கவிஞர் சித்தலிங்கையாவின் பாடலை நீக்கிய கர்நாடக அரசு

இந்துக்களின் உணர்வுகள் புண்படுகிறது : மறைந்த தலித் கவிஞர் சித்தலிங்கையாவின் பாடலை நீக்கிய கர்நாடக அரசு

காட்சிப் படம்

காட்சிப் படம்

சந்திரனும், சூரியனும் கடவுள்கள் அல்ல" என்ற வரிகள் இந்துக்களின் மனதை புண்படுத்தும் விதமாக அமைந்துள்ளது - கல்வி அமைச்சர்

    பள்ளிப் பாடங்களிலிருந்து மறைந்த புகழ்பெற்ற கன்னட தலித் எழுத்தாளர், கவிஞர் சித்தலிங்கையாவின் பாடல்களை நீக்க கர்நாடக கல்வித் துறை அமைச்சர் பிசி. நாகேஷ் உத்தரவிட்டுள்ளார். அரசின் இந்த முடிவு  விவாதப் பொருளாக மாறியுள்ளது.

    சித்தலிங்கையாவின்  பெரும்பாலான படைப்புகள் சமூக மதிப்பில்லாத விளிம்பு நிலை மக்களின் வாழ்வியலை  மையமாக வைத்து உருவாக்கப்பட்டவை. அந்த வகையில், இவரது படைப்பான  'பூமி' என்ற பாடலை, பாரகுரு ராமச்சந்திரன் தலைமையிலான பாடத்திட்டக் குழு பரிந்துரைத்தது. இதனை, அப்போதைய காங்கிரஸ் அரசு  4ம் வகுப்பு பாடப்புத்தகத்தில்  சேர்த்தது.

    இந்நிலையில், கர்நாடகாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, அதிகாரத்துக்கு வந்த பாஜக அரசு 1 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களின் பாடத்திட்டத்தை  திருத்துவதற்காக ரோகித் சக்ரதீர்த்த தலைமையில் பாடநூல் திருத்தக் குழுவை அம்மாநில அரசு அமைத்தது.

    இக்குழுவின் பரிந்துரைகள் பல்வேறு சர்ச்சைகளை உருவாக்கின. உதாரணமாக, லிங்காயத் சமூகத்தின் போதனைவாதியும், தத்துவஞானியுமான, பசவண்ணா தனது புனித நூல் அகற்றியது தொடர்பான கருத்துக்களையும், இந்திய அரசியலமைப்பு சட்டத்தை வடிவமைத்த அம்பேத்கர் தொடர்பான கருத்துக்களை இந்த குழு பாடப்புத்தகத்தில் இருந்து நீக்க பரிந்துரைத்தது. மேலும், சாரா அபூபக்கர், பி. லங்கேஷ் போன்ற முற்போக்கு சிந்தனையாளர்களின் கருத்துகளும் பாடப்புத்தகத்தில் இருந்து நீக்க பரிந்துரை செய்தது.

    இதற்கிடையே, முந்தைய காலங்களில் சமூக வலைத்தளங்களில் பாடநூல் திருத்தக் குழு  தலைவர்  ரோகித் சக்ரதீர்த்த பதிவிட்ட சில மோசமான, ஆவாசமான கருத்துகள் சர்சையைக் கிளப்பின. இதனையடுத்து, இந்த  பாடநூல் திருத்தக் குழுவை கலைப்பதாக அம்மாநில அரசு அறிவித்தது.

    இதையும் வாசிக்க:  முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்த எண்ணும் எழுத்தும் திட்டம் ஓர் அறிமுகம்

    இந்நிலையில் 4ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ள சித்தலிங்கையாவின்  பூமி என்ற பாடலை நீக்கி அம்மாநில அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். பாடலில் இடம்பெற்றுள்ள "சந்திரனும், சூரியனும் கடவுள்கள் அல்ல" என்ற வரிகள் இந்து மக்களின் புண்படுத்தும் விதமாக அமைந்துள்ளதாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
    Published by:Salanraj R
    First published:

    Tags: Karnataka

    அடுத்த செய்தி