Home /News /education /

கள்ளக்குறிச்சியில் இன்று 92% தனியார் பள்ளிகள் செயல்பட்டன: தமிழக அரசு

கள்ளக்குறிச்சியில் இன்று 92% தனியார் பள்ளிகள் செயல்பட்டன: தமிழக அரசு

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

நேற்று வன்முறை நடந்த கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மீண்டும் இயல்பு நிலை திரும்புவதற்கான முயற்சிகள் மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

    தமிழகத்தில் இன்று தனியார் பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் என்று மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநரகம் அறிவித்தும், தர்மபுரி, நாம்மக்கல், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் பாதிக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் செயல்படவில்லை.

    முன்னதாக, கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்ன சேலத்தில் இயங்கி வரும் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விடுதியில் தங்கி பயின்று வந்த 12ம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி தற்கொலை செய்து கொண்டார்.மாணவியின் மரணத்தில் சந்தேகங்கள் இருப்பதாக கூறி அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

    இந்நிலையில், நேற்று இந்த போராட்டம் வன்முறையாக வெடித்தது. பள்ளியின் உடமைகள் சேதப்படுத்தப்பட்டன. இதனையடுத்து, பள்ளியில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இன்று  ஒருநாள் தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகள் இயங்காது என தமிழ்நாடு தனியார் பள்ளிகள் கூட்டமைபின் சார்பில் அறிவிக்கப்பட்டது.

    ஆனால், விதிமுறைகளை மீறி தனியார் பள்ளிகள் விடுமுறை அளித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநரகம் அறிவித்தது.மேலும் , எந்தவித முன் அனுமதி பெறாமல் தனியார் பள்ளிகள் விடுமுறை அறிவித்தார் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் நடைவடிக்கை எடுப்பார்கள் என்றும் அறிவித்தது.





    இந்நிலையில், இன்று தரம்புரி, நாமக்கல் உள்ளிட்ட  மாவட்டங்களில் பெரும்பாலான தனியார் பள்ளிகள் செயல்படவில்லை.  மாவட்டத்தின் மொத்த மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் 14% பள்ளிகள் மட்டுமே இன்று செயல்பட்டன, அதேபோன்று மழலையர்  மற்றும் ஆரம்ப நிலை தொடக்கப்  பள்ளிகளில் 19% பள்ளிகளும், சிபிஎஸ்இ பள்ளிகளில் 12% பள்ளிகளும் செயல்பட்டன.   நாமக்கல் மாவட்டத்திலும் இதே போக்கு காணப்பட்டது. இன்று, அங்கு 32% பள்ளிகள் மட்டுமே செயல்பட்டுள்ளன.

    இதையும் வாசிக்க:   கடந்த ஆண்டை விட நீட் தேர்வு சிரமமாக இருந்தது - மாணவர்கள் கருத்து

    அதே சமயம், நேற்று வன்முறை நடந்த கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மீண்டும் இயல்பு நிலை திரும்புவதற்கான முயற்சிகள் மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. இன்று, அந்த மாவாட்டத்தில் அநேக பள்ளிகள் (92%) செயல்பட்டுள்ளன.

    இதையும் வாசிக்க:  NEET Answer Keys : நீட் தேர்வின் உத்தேச விடைகள் குறித்த அப்டேட்

    மொத்தமுள்ள மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் 96% பள்ளிகளும், மழலையர் மற்றும் ஆரம்ப நிலைப் பள்ளிகளில் 90% பள்ளிகளும், சிபிஎஸ்இ பள்ளிகளில் 86% பள்ளிகளும் இன்று வழக்கம் போல் செயல்பட்டன. காஞ்சிபுரம், விழுப்புரம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் 100% பள்ளிகள் வழக்கம் போல் செயல்பட்டன.
    Published by:Salanraj R
    First published:

    Tags: Kallakurichi

    அடுத்த செய்தி