• HOME
  • »
  • NEWS
  • »
  • education
  • »
  • மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க குழு: தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் நியமனம்!

மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க குழு: தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் நியமனம்!

ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன்

ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன்

இதில், அரசு பள்ளி மாணவர்களுக்கு எத்தனை சதவீதம் தனி இட ஒதுக்கீடு அளிக்கலாம் என்பது குறித்து ஆலோசிக்கப்படுகிறது.

  • Share this:
அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் தனி இட ஒதுக்கீடு வழங்க ஆய்வு செய்யும் குழுவின் தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் நியமிக்கப்பட்டுள்ளார்.

குழுவின் தலைவர் கலையரசன் தலைமையில் நாளை சென்னையில் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு, மருத்துவ படிப்பில் சேர தனி இட ஒதுக்கீடு அளிப்பது குறித்து ஆய்வு செய்யும் குழுவின் தலைவராக, ஓய்வுபெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கலையரசன் நியமிக்கப்பட்டுள்ளார். இவரது தலைமையிலான குழு நாளை சென்னையில் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளது.

கடந்த மாதம் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில், நீட் தேர்வில் தேர்ச்சிபெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு, மருத்துவ படிப்பில்சேர தனி இட ஒதுக்கீடு அளிக்கப்படும் என்கிற அறிவிப்பை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். இதற்காக, ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்படும் எனவும், அக்குழு, இட ஒதுக்கீடு குறித்து ஆய்வு செய்து, அரசு பள்ளி மாணவர்களுக்கான ஒதுக்கீடு குறித்து, அரசுக்கு 1மாத காலத்தில் பரிந்துரை அளிக்கும் என்று அறிவித்தார் பரிந்துரை அடிப்படையில் அரசு முடிவெடுத்து செயல்படுத்தும் எனவும் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.

அதனடிப்படையில் குழுவின் தலைவராக, ஓய்வுபெற்ற சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் நியமிக்கப்பட்டுள்ளார். குழு உறுப்பினர்களாக, உயர்கல்வி, பள்ளிக்கல்வி, சுகாதாரத்துறை செயலாளர்கள், மருத்துவக் கல்வி இயக்குனர், மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கை செயலாளர் உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த குழுவின் முக்கிய ஆலோசனைக் கூட்டம், நீதியரசர் கலையரசன் இல்லத்தில் நாளை நடைபெற உள்ளது. இதில், அரசு பள்ளி மாணவர்களுக்கு எத்தனை சதவீதம் தனி இட ஒதுக்கீடு அளிக்கலாம் என்பது குறித்து ஆலோசிக்கப்படுகிறது. அடுத்த ஒரு மாத காலத்தில் ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன், முதல்வரிடம் பரிந்துரை அறிக்கையை தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதன் அடிப்படையில், இந்த ஆண்டு முதல் மருத்துவபடிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கும் அறிவிப்பை அரசு பெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also see...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: