Home /News /education /

B.Arch படிப்பில் புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளி மாணவர்கள் : நீதியரசர் முருகேசன் ஆணையம் சொல்வதென்ன?

B.Arch படிப்பில் புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளி மாணவர்கள் : நீதியரசர் முருகேசன் ஆணையம் சொல்வதென்ன?

முருகேசன் ஆணையம் அறிக்கை

முருகேசன் ஆணையம் அறிக்கை

2019-20 கல்வியாண்டில், கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள கட்டிடக்கலை மற்றும் திட்டமிடல் பள்ளியில் 5 ஆண்டு B.Arch பட்டப் படிப்பில் ஒரே ஒருவர் அரசுப் பள்ளி மாணவர் மட்டுமே சேர்க்கை பெற்றுள்ளார்

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
2016,2017,2018 மற்றும் 2020 என முந்தைய  கல்வியாண்டுகளில் கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள கட்டிடக்கலை மற்றும் திட்டமிடல் பள்ளியில் 5 ஆண்டு B.Arch பட்டப் படிப்பில் ஒரு அரசுப் பள்ளி மாணவர் கூட சேர்க்கை பெறவில்லை என நீதியரசர் முருகேசன் ஆணையம் தனது ஆய்வில் தெரிவித்துள்ளது.

முன்னதாக, தொழிற்கல்வி நிறுவனங்களில் அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர் சேர்க்கை  குறித்து ஆராய ஓய்வுபெற்ற நீதியரசர் முருகேசன் தலைமையில் தமிழ்நாடு அரசு ஆணையம் அமைத்தது. அந்த ஆணையம், தொழிக்கல்வி வழங்கும் கல்லூரிகள்/பல்கலைக்கழகங்கள்/ சுயநிதி கல்லூரிகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10%க்கும் குறையாமல் முன்னிலை அடிப்படையில் இடங்கள் ஒதுக்க  வேண்டும் என்று பரிந்துரைத்தது. ஆனால், தமிழ்நாடு அரசு, அரசுப் பள்ளி பயிலும்   மாணவர்களுக்கு தொழிற்கல்வி நிறுவனங்களில் வெறும் 7.5% இடங்கள் ஒதுக்கீடு செய்து சட்டம் நிறைவேற்றியது.

 B.Arch பட்டப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களின் நிலை என்ன:

2016 முதல் 2020 வரையிலான கடந்த 5 ஆண்டுகளில்  B.Arch பட்டப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களின் சேர்க்கை குறித்த தரவுகளை ஆணையம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Justice Murugesan Commission
B.Arch பட்டப்படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களின் சேர்க்கை நிலவரம்


அண்ணா பல்கலைக்கழகம்:

2019-20 கல்வியாண்டில், கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள கட்டிடக்கலை மற்றும் திட்டமிடல் பள்ளியில் 5 ஆண்டு B.Arch பட்டப் படிப்பில் ஒரே ஒருவர் அரசுப் பள்ளி மாணவர் மட்டுமே சேர்க்கை பெற்றுள்ளார். அந்தவொரு மாணவரும், முதல் தலைமுறை பட்டதாரி குடும்பத்தில் இருந்து வந்திருக்கிறார்.  ஆனால், 2016-17, 2017-18, 2018-19, 2020-21 கல்வியாண்டுகளில்  அரசுப் பள்ளி மாணவர் கூட சேர்க்கை எண்ணிக்கை பூஜ்ஜியமாக உள்ளது.

இதையும் வாசிக்க: அதிகரிக்கும் கல்வி ஏற்றத்தாழ்வுகள்! நீதியரசர் முருகேசன் ஆணையத்தின் பரிந்துரைகள் என்ன?

 

அரசு உதவி பெறும் கல்லூரிகளில் அனுமதிக்கப்பட்ட 56 இடங்களில், 2016-17, 2018-19 மற்றும் 2019-20 கல்வியாண்டுகளில் வெறும்  ஒரே ஒரு அரசுப் பள்ளி மாணவர் மட்டுமே சேர்க்கைப் பெற்றுள்ளனர். அதேபோன்று, 2017-18, 2020-2021 கல்வியாண்டுகளில் அரசுப் பள்ளி மாணவர்களை எண்ணிக்கை பூஜ்ஜியமாக உள்ளது.

முந்தைய ஆண்டுகளில் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் அரசுப் பள்ளி மாணவர்களின் சேர்க்கை விதம் முறையே  1.01, 0.35, 0.66, 1.40, 1.08  ஆக உள்ளது என்பது குறிப்பிடதக்கது.

 

 
Published by:Salanraj R
First published:

Tags: Department of School Education, Education

அடுத்த செய்தி