ஹோம் /நியூஸ் /கல்வி /

ஜேஇஇ தேர்வுக்கான அனுமதிச் சீட்டு எப்போது வெளியாகும்?

ஜேஇஇ தேர்வுக்கான அனுமதிச் சீட்டு எப்போது வெளியாகும்?

மாதிரி படம்

மாதிரி படம்

முதல் கட்ட ஜேஇஇ முதன்மைத் தேர்வு ஜூன் 20ம் தேதி தொடங்கி 29ம் தேதி வரை 9 நாட்களுக்கு நடைபெறும்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

ஜேஇஇ தேர்வுக்கு இன்னும் 10 நாட்கள் மட்டும் இருப்பதால், ஜேஇஇ முதன்மை தேர்வுக்கான மின்னணு அனுமதி நுழைவுச் சீட்டு எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2022  ஏப்ரல் மாத முதற்கட்ட அமர்வுக்கான விண்ணப்ப செயல்முறையை, தேசிய தேர்வு முகமை  முன்னதாக தொடங்கியது. இதற்கான தேர்வு, ஜூன் 20ம் தேதி தொடங்கி 29ம் தேதி வரை 9 நாட்களுக்கு ஒரு நாளைக்கு 2 ஷிஃப்டுகளில் - காலை 09:00 முதல் 12:00 மணி வரை, பிற்பகல் 3 :00 மணி முதல் மாலை 6 வரை தேர்வு நடைபெறும்.

பொதுவாக, தேர்வுத் தேதிக்கு 10 நாள் முன்னதாக மின்னணு அனுமதி நுழைவுச் சீட்டு வெளியிடப்படும். எனவே, இன்றைய தேதியில் இருந்து எப்போது வேண்டுமானாலும் நுழைவுச் சீட்டு வெளியாகலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.  ஆன்லைன் விண்ணப்பங்களில் விண்ணப்பதாரர்கள் அளித்த  செல்பேசி எண்கள், மின்னஞ்சல் முகவரிக்கு  விவரங்கள் அனுப்பப்படும்  என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அனுமதி நுழைவுச் சீட்டு தனியாக அஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்பட மாட்டாது. jeemain.nta.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். அனுமதி நுழைவுச் சீட்டில் தேர்வு மையம் , ஷிஃப்டு உள்ளிட்ட விபரங்கள் இடம் பெற்றிருக்கும்.

இதையும் பார்க்க:   

TANCET தேர்வு முடிவுகள் வெளியானது.. மதிப்பெண் சான்றிதழை நாளை முதல் பதிவிறக்கம் செய்யலாம்

இத்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் தேர்வின் போது கட்டாயம் அனுமதிச் சீட்டை எடுத்து வர வேண்டும். மேலும்,  அனுமதிச்  சீட்டில் கொடுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு நிபந்தனைகளையும்  கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

இரண்டாம் கட்ட தேர்வுக்கான விண்ணப்ப செயல்முறை தொடங்கப்பட்டுள்ளது: 

இதற்கிடையே, இரண்டாம் கட்ட ஜேஇஇ முதன்மை தேர்வுக்கான (JEE (Main) – 2022 Session 2 ) விண்ணப்ப செயல்முறை தற்போது தொடங்கப்பட்டுள்ளது.    ஆன்லைனில் விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்கு உரிய கடைசி நாள் ஜூன் 30 ஆகும்.

ஜுலை 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30 ஆகிய தேதிகளில் தேர்வு நடைபெறவுள்ளன.

பொது விபரங்கள்: மாணவர்கள் தங்கள் வசதிக்கேற்ப, ஏப்ரல்/மே என்ற இரண்டுஅமர்வுகளிலும் தேர்வை எழுதலாம். மாணவர்களின் சிறந்த செயல் திறனின் அடிப்படையில் தரவரிசையில் இடம் பெறுவார்கள்.

ஏற்கனவே, முதல் அமர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் , தங்கள் பதிவெண் மற்றும் கடவுச் சொல் பயன்படுத்தி உள்நுழைய வேண்டும். தேர்வுத் தாள், மொழி, தேர்வு மையங்கள் அமைந்துள்ள நகரங்கள் ஆகிய விபரங்களை மட்டுமே மாற்றிக் கொள்ளலாம். இரண்டாம் அமர்வுக்கான தேவையான கட்டணங்களை செலுத்த வேண்டியிருக்கும்.

இதையும் படிக்க:  

உலக பல்கலைக்கழக தர வரிசைப்பட்டியல்: இந்திய கல்வி நிறுவனங்களின் நிலை என்ன?

முதல் அமர்வுக்கு விண்ணப்பிக்காமல் புதிதாக விண்ணப்பிக்க விரும்புவோர், வழக்கம் போல் https://jeemain.nta.nic.in என்ற இனையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

மொத்தம் கேட்கப்படும் 90 கேள்விகளிலிருந்து (இயற்பியியல், வேதியியல் மற்றும் கணிதத்தில் தலா 30 கேள்விகள்) மாணவர்கள் ஏதேனும் 75 கேள்விகளுக்கு (இயற்பியியல், வேதியியல் மற்றும் கணிதத்தில் தலா 25 கேள்விகள்) பதில் அளிக்கும் வகையில் தேர்வு முறை இருக்கும். தவறான பதிலுக்கு மதிப்பெண் குறைக்கப்படும்.

அவ்வப்போதைய நிலவரங்களைத் தெரிந்து கொள்வதற்கு, மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும், இங்கு கொடுக்கப்பட்டுள்ள இணையதளங்களைப் பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். jeemain.nta.nic.in மற்றும் www.nta.ac.in

வேறு ஏதேனும் விளக்கம் தேவைப்பட்டால், மாணவர்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம். 011- 40759000/011-69227700

First published:

Tags: Jee