2022 ஜேஇஇ முதன்மைத் தேர்வுக்கான அனுமதி நுழைவுச் சீட்டை தேசிய தேர்வு முகமை வெளியிட்டது. https://jeemain.nta.nic.in/ என்ற இணையதளத்தில் இருந்து தேர்வர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
நாடு முழுவதும், 501 நகரங்களில் உள்ள தேர்வு மையங்களில் ஜூன் 23,24,25,26,27, 28, 29 ஆகிய 7 நாட்களுக்கு ஒரு நாளைக்கு 2 ஷிஃப்டுகளில் - காலை 09:00 முதல் 12:00 மணி வரை, பிற்பகல் 3 :00 மணி முதல் மாலை 6 வரை - தேர்வு நடைபெறும்.
அனுமதி நுழைவுச் சீட்டு தனியாக அஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்பட மாட்டாது. jeemain.nta.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். அனுமதி நுழைவுச் சீட்டில் தேர்வு மையம் , ஷிஃப்டு உள்ளிட்ட விபரங்கள் இடம் பெற்றிருக்கும். தேர்வு மையங்களில் அனுமதிச் சீட்டில் இடம்பெற்றுள்ள நிபந்தனைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.
இதையும் வாசிக்க: அடுத்த 6 மாதத்துக்குள் 42,000 பேருக்கு பணி - வேலைவாய்ப்பு குறித்து எஸ்எஸ்சி முக்கிய அறிவிப்பு
ஜூன் 20ம் தேதி தேர்வு நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், 23ம் தேதிக்கு மாற்றப்பட்டதாக தேசிய தேர்வு முகமை முன்னதாக அறிவித்தது. நாடு முழுவதும், அக்னிபத் திட்டத்திற்கு எதிராக இளைஞர்கள் போராட்டம் நடத்தி வரும் வேளையில், ஜேஇஇ நுழைவுத் தேர்வை ஒத்தி வைக்க வேண்டும் என்று தேர்வர்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.
இதையும் வாசிக்க: பொறியியல் படிப்புகளுக்கான கட் ஆப் மதிப்பெண்கள் குறையலாம்: கல்வியாளர்கள்
பொதுவாக, தேர்வுத் தேதிக்கு 10 நாள் முன்னதாக அனுமதி நுழைவுச் சீட்டு வெளியிடப்படும். ஆனால், நாளை மறுநாள் தொடங்கும் தேர்வுக்கு நேற்று வரை அனுமதிச் சீட்டு வெளியிடப்படாததால் தேர்வு தள்ளிவைக்கப்படலாம் என்ற கருத்தும் நிலவி வந்தது. இந்நிலையில், 2022 ஜேஇஇ முதன்மைத் தேர்வுக்கான அனுமதி நுழைவுச் சீட்டை தேசிய தேர்வு முகமை வெளியிட்டது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Jee