இரண்டாம் கட்ட ஜேஇஇ முதன்மைத் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் தங்கள் விண்ணப்பபங்களில் திருத்தம் மேற்கொள்ளலாம் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
தேர்வு முகமை வெளியிட்ட செய்திக் குறிப்பில், பெற்றோர் மற்றும் மாணவர்களிடம் இருந்து பெற்றோர் மற்றும் மாணவர்களிடம் இருந்து பெறப்பட்ட தொடர்ச்சியான கோரிக்கையினை ஏற்று, பாடநெறி மற்றும் வினாத்தாள் மொழி உள்ளிட்ட திருத்தங்களை மேற்கொள்வதற்கு கால அவகாசத்தை தேசிய தேர்வு முகமை அளித்துள்ளது.
ஜுலை 3ம் தேதி நள்ளிரவு 11.50 மணி வரையில் ஆன்லைன் விண்ணப்பப் படிவங்களில் திருத்தம் மேற்கொள்ளலாம். தேவையான கட்டணங்களை, கடன் அட்டை /சேமிப்பு கணக்கு அட்டை / இணையதள வங்கிச் சேவை/ யுபிஐ பேடிஎம் மூலமாக செலுத்தலாம்.
விண்ணப்பதாரர்கள் jeemain.nta.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள தகவல் அறிக்கையில் இருந்து மேலும் விவரங்கள் குறித்து தெரிந்துகொள்ளலாம்.
விண்ணப்பப் படிவங்களில் செய்த திருத்தங்களின் காரணமாக (கூடுதல்) கட்டணம் செலுத்த வேண்டியிருந்தால், கட்டணம் செலுத்தப்பட்ட பிறகே, திருத்தியமைக்கப்பட்ட விவரங்கள் விண்ணப்பப் படிவத்தில் இடம்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் வாசிக்க: இந்திய வங்கிகளில் 6035 எழுத்தர் காலிப்பணியிடங்கள்: விண்ணப்பம் செய்வது எப்படி?
தேர்வு: தேர்வு தேதியில் எந்த மாற்றமும் இல்லை. ஜுலை 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30 ஆகிய தேதிகளில் 2 ஷிப்ட்களாக இந்த தேர்வு நடைபெறுகிறது. முதல் ஷிப்ட் காலை 9 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை நடைபெறும். 2வது ஷிப்ட் மதியம் 3 மணி முதல் மாலை 6 மணி வரையும் நடைபெறும்.
இதையும் வாசிக்க: பள்ளிக் கல்வியில் சிறந்து விளங்கும் மாவட்டங்கள் எது? புள்ளிவிவரங்கள் வெளியானது
விண்ணப்பதாரர்களும் அவர்களது பெற்றோர்களும் jeemain.nta.nic.in மற்றும் www.nta.ac.in இணையதளத்திற்கு வருகை தந்து சமீபத்திய தகவல்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம். மேலும் தெளிவான விவரங்களுக்கு விண்ணப்பதாரர்கள், பின்வரும் தொலைபேசி எண்களிலும் தொடர்பு கொள்ளலாம் 011-40579000/011-69227700. மின்னஞ்சல் தொடர்புக்கு jeemain@nta.ac.in.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Jee