முகப்பு /செய்தி /கல்வி / JNU Clash: தேசியத் தலைவர்கள் அவமதிக்கப்படவில்லை: ஜேஎன்யு நிர்வாகம் கொடுத்த விளக்கம்!

JNU Clash: தேசியத் தலைவர்கள் அவமதிக்கப்படவில்லை: ஜேஎன்யு நிர்வாகம் கொடுத்த விளக்கம்!

ஜேஎன்யூ பல்கலைக்கழகம்

ஜேஎன்யூ பல்கலைக்கழகம்

தேசியத் தலைவர்கள் அவமதிக்கப்பட்டதாக கூறுவது உண்மைக்குப் புறம்பானது என்றும், அவதூறானது என்றும் ஜேஎன்யு பல்கலைக்கழகம் விளக்கம் அளித்துள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

பல்கலைக்கழக வளாகத்தில் பன்முகத் தன்மையை சீர்குலைக்க முயற்சிப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் ஜே.என்.யு பல்கலைக்கழக பதிவாளர் எச்சரித்துள்ளார்.

ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக பதிவாளர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், பல்கலைக் கழக மாணவர் மன்றத்தில் மாணவர்கள் சிலரும் வெளியாட்களும் ஒழுங்கீனமாக நடந்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது ஏற்பட்ட குழப்பத்தில் தேசியத் தலைவர்கள் அவமதிக்கப்பட்டதாக கூறுவது உண்மைக்குப் புறம்பானது என்றும், அவதூறானது என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து தீவிரமாக விசாரிக்க துணைவேந்தர் உத்தரவிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். தேசியத் தலைவர்களின் அரும்பணிகளை என்றென்றும் மதித்துப் போற்றிப் பல்கலைக்கழக வளாகத்தில் பன்முகத்தன்மையை நிலைநாட்டுதலும் பல்கலைக்கழக வளாகத்தில் நல்லுறவைப் பேணுதலும் இணைகோடுகளாக அமையவேண்டும் என்பதே பல்கலைக்கழகத்தினரின் விருப்பம் என்றும், இதற்கு மாறாக யார் நடந்துகொண்டாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பதிவாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

First published:

Tags: JNU