• HOME
  • »
  • NEWS
  • »
  • education
  • »
  • ஜிப்மரில் எம்.பி.பி.எஸ் படிப்புக்கு விண்ணப்பிக்க அழைப்பு!

ஜிப்மரில் எம்.பி.பி.எஸ் படிப்புக்கு விண்ணப்பிக்க அழைப்பு!

கோப்புப் படம்

கோப்புப் படம்

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக்கல்லூரியில் ஜூன் 2 ம் தேதி காலை 10 மணி, மதியம் 3 மணி ஆகிய இரண்டு வேளையில் தேர்வுகள் நடக்கிறது.

  • News18
  • Last Updated :
  • Share this:
புதுச்சேரியில் ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் பட்டப்படிப்பு நுழைவுத் தேர்விற்கு இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

புதுவையில் உள்ள ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் 200 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. இந்த இடங்கள் ஆண்டுதோறும் நுழைவுத் தேர்வு மூலம் நிரப்பபடுகின்றன.

வரும் கல்வியாண்டுக்கான நுழைவுத் தேர்வு வரும் ஜூன் மாதம் 2-ம் தேதி காலை மாலை என இரண்டு பிரிவுகளாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நாடு முழுவதும் ஒரு லட்சத்து 97, 745 பேர் தேர்வு எழுதிய நிலையில், இந்தாண்டு 2 லட்சம் மாணவர்கள் எழுதுவார்கள் என ஜிப்மர் நிர்வாகம் எதிர்பார்க்கிறது.

இதற்காக இன்று ( மார்ச்-6ம் தேதி ) காலை 11 மணி முதல் ஆன்லைன் பதிவு துவங்குகிறது. www.jipmer.puducherry.gov.in மற்றும் www.jipmer.edu.in ஆகிய இணைய முகவரியில் ஏப்ரல் 12-ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்.



மேலும் மே 20-ம் தேதி முதல் ஜூன் 2-ம் தேதி காலை 8 மணி வரை தேர்வுக்கூட நுழைவுச்சீட்டை இணையத்தளத்தில் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.

இதில் மொத்தம் உள்ள 200 இடங்களில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரிக்கு 150 இடங்களும் காரைக்கால் ஜிப்மர் கல்லூரிக்கு 50 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

Also see... ஜெயலலிதாவுக்கு அல்வா கொடுத்து கொன்று விட்டனர் - அமைச்சர் பரபரப்பு குற்றச்சாட்டு

மோடியுடன் மேடை ஏறுவாரா விஜயகாந்த்? இன்று கூட்டணி அறிவிப்பு 

நாளிதழ்களில் இன்றைய சுவாரஸ்ய செய்திகள்! (06.03.19)

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: