முகப்பு /செய்தி /கல்வி / AI-ல் முதுகலை பட்டப்படிப்பு வழங்கும் ஜியோ கல்வி நிறுவனம் - விண்ணப்பிப்பது எப்படி?

AI-ல் முதுகலை பட்டப்படிப்பு வழங்கும் ஜியோ கல்வி நிறுவனம் - விண்ணப்பிப்பது எப்படி?

செயற்கை நுண்ணறிவு மற்றும் கம்யூனிகேஷன் ஆகிய பாடங்களில் PG பட்டப்படிப்பை வழங்கவுள்ளதாக ஜியோ கல்வி நிறுவனம் தெரிவித்துள்ளது.

செயற்கை நுண்ணறிவு மற்றும் கம்யூனிகேஷன் ஆகிய பாடங்களில் PG பட்டப்படிப்பை வழங்கவுள்ளதாக ஜியோ கல்வி நிறுவனம் தெரிவித்துள்ளது.

செயற்கை நுண்ணறிவு மற்றும் கம்யூனிகேஷன் ஆகிய பாடங்களில் PG பட்டப்படிப்பை வழங்கவுள்ளதாக ஜியோ கல்வி நிறுவனம் தெரிவித்துள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

ரிலையன்ஸ் நிறுவனம் சார்பில் தொடங்கப்பட்ட ஜியோ கல்வி நிறுவனம் தற்போது செயற்கை நுண்ணறிவு, டேட்டா சயின்ஸ், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கம்யூனிகேஷன் ஆகிய பாடங்களில் PG கோர்ஸ்களை அறிமுகம் செய்துள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் உடனடியாக பெறப்படுகின்றன என ஜியோ கல்வி நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை சமர்பிக்க மே 20ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்த செயற்கை நுண்ணறிவு பாடம் சமூகத்திற்கும் பல்வேறு நிறுவனங்களும் சந்திக்கும் சவால்களுக்கு எவ்வாறு நடைமுறை தீர்வுகள் அளிப்பது என்பதை கற்பிக்கும். அதேபோல் கம்யூனிகேஷன் பாடம், மாணவர்களை தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், வாடிக்கையாளர் சேவை, அவர்களுடன் தொடர்புகொண்டு அவர்களை நிர்வகிப்பது எப்படி என்பதை கற்பிக்கும் எனக் கூறியுள்ளது.

விண்ணப்ப தகுதிகள்

செயற்கை நுண்ணறிவு பாட திட்டத்தில் சேர, விண்ணப்பிக்கும் நபர் கம்ப்யூட்டர் சயின்ஸ்/ ஐடி/ கணிதம்/ புள்ளியியல்/ பொருளாதாரம் ஆகிய ஏதேனும் ஒரு படிப்பிடில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

கம்யூனிகேஷன் பாட திட்டத்தில் சேர, ஏதேனும் ஒரு பாடத்தில் மூன்று வருட இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

இந்த இரு படிப்பிலும் சேர விண்ணப்பதாரர் தங்கள் இளங்கலை படிப்பில் குறைந்த பட்சம் 50 சதவீதம் அல்லது அதற்கு நிகரான சிஜிபிஏ எடுத்திருக்க வேண்டும். அத்துடன் சம்பந்தப்பட்ட துறையில் ஜூலை 1 2022 தேதி படி 18 மாதம் பணிபுரிந்திருக்க வேண்டும் என பொது விதியை குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க: பொதுத்தேர்வு நெருங்கும் நிலையில் அதிகரிக்கும் கொரோனா... சிபிஎஸ்இ மாணவர்கள் புதிய கோரிக்கை

எவ்வாறு விண்ணப்பிப்பது

முதலில் விண்ணப்பதாரர், jioinstitute.edu.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.2,500. தொடர்ந்து ஆன்லைன் மூலம் ஜியோ நிறுவனத்தின் நுழைவுத் தேர்வை(JET) எழுத வேண்டும். அல்லது இந்த நுழைவுத் தேர்வுக்கு பதிலாக விண்ணப்பதாரர் GRE தேர்வு மதிப்பெண்ணை சமர்பிக்கலாம்.

இதன் பின்னர் தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வுக்கு வர வேண்டும். இந்த மூன்றையும் வைத்து மதிப்பிட்டு அதன்படி தான் விண்ணப்பதாரர் சேர்க்கை உறுதி செய்யப்படும். திறன் மிக்க மாணவர்கள், மாற்று திறனாளிகள், சர்வதேச மாணவர்களுக்கு 100 சதவீதம் வரை ஸ்காலர்ஷிப் வழங்கப்படும் எனவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்திய இளைஞர்களை உலக தரம் வாய்ந்த நபர்களாக உருவாக்கி, சர்வதேச அளவில் மாற்றத்தை உருவாக்குவதே எங்கள் நிறுவனத்தின் நோக்கம் என பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் தீபக் ஜெயின் தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Jio