Home /News /education /

Jio Institute: ஜியோ கல்வி நிறுவனத்தில் முதல் பேட்ச் வகுப்புகள் ஆரம்பம்.. நீட்டா அம்பானி நெகிழ்ச்சி

Jio Institute: ஜியோ கல்வி நிறுவனத்தில் முதல் பேட்ச் வகுப்புகள் ஆரம்பம்.. நீட்டா அம்பானி நெகிழ்ச்சி

நீட்டா அம்பானி

நீட்டா அம்பானி

JIO INSTITUTE: மும்பையின் புறநகர்ப் பகுதியில் 800 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்பட்ட  இந்த கல்வி நிலையத்தை அமைக்க ரிலையன்ஸ் அறக்கட்டளை ரூ.1,500 கோடி செலவிட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது

    ஜியோ கல்வி நிறுவனத்தில் முதல் பேட்ச் வகுப்புகள் ஆரம்பமாகியுள்ளது. இது குறித்து பேசிய , ரிலையன்ஸ்  கல்வி மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளை நிறுவனத்தின் நிறுவன தலைவர் திருமதி. நீட்டா அம்பானி,  உயர் கல்வியை மறுவரையறை செய்ய வேண்டும் என்ற கனவில் இருந்து ஜியோ பல்கலைக்கழகம் பிறந்ததாக நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

    நவி மும்பையில் அமைந்துள்ள ஜியோ இன்ஸ்டிடியூட் இரண்டு படிப்புகள் மற்றும் 120 மாணவர்களுடன் தொடங்கியுள்ளது. இதன் தொடக்க விழாவில், மாணவர்கள், பெற்றோர்கள், ஜியோ நிறுவன தலைவர்கள் மற்றும் ஊழியர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர். வகுப்புகள் நாளை (ஜூலை 21) முதல் தொடங்குகிறது.

    லையன்ஸ்  கல்வி மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளை நிறுவனத்தின் நிறுவன தலைவர் திருமதி. நீட்டா அம்பானி இது குறித்து பேசுகையில் ”இந்தியாவில் உயர்கல்வியை மறுவரையறை செய்யவும், எங்கள் நிறுவனர், என் மாமனார் திருபாய் அம்பானியின் பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்ற கனவை எனது கணவர் முகேஷுடன் நான் பகிர்ந்து கொண்டதில் இருந்து ஜியோ நிறுவனம் பிறந்தது" என தெரிவித்தார்.

    இந்தியாவின் மிக மதிப்புமிக்க நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநரான முகேஷ் அம்பானியின் மனைவியான நிதா, குழுமத்தின் தொண்டு நடவடிக்கைகளுக்கு தலைமை தாங்குகிறார்.

    கல்வி அமர்வின் தொடக்கத்தில் மாணவர்களிடம் உரையாற்றும் போது பேசிய நீட்டா அம்பானி, இன்று புதிய தொடக்கத்தை குறிக்கிறது. ஜியோ நிறுவனம் மற்றும் உங்கள் அனைவருக்கும் முக்கிய மைல்கல் இது. ஒரு  கல்வி நிறுவனத்தின்  ஒவ்வொரு பேட்ச்சும் சிறப்பு வாய்ந்தது, ஏனெனில் அவை இந்த நிறுவனங்களின் வளர்ச்சி மற்றும் கலாச்சார கட்டமைப்பிற்கு பங்களிக்கின்றன. ஆனால் முதலாவது பேட்சு எப்போதும் கூடுதல் சிறப்பு வாய்ந்தது’ என குறிப்பிட்டார்.

    மும்பையின் புறநகர்ப் பகுதியில் 800 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்பட்ட  இந்த கல்வி நிலையத்தை அமைக்க ரிலையன்ஸ் அறக்கட்டளை ரூ.1,500 கோடி செலவிட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

    ஜியோ இன்ஸ்டிடியூட் பல்வேறு பாடங்களில் நிபுணர்களை கொண்டு வர, மாசசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, நார்த்வெஸ்டர்ன் யுனிவர்சிட்டி, ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம் மற்றும் நான்யாங் டெக்னாலஜிக்கல் யுனிவர்சிட்டி போன்ற புகழ்பெற்ற உலகளாவிய கல்வி நிறுவனங்களுடன் கைகோர்த்துள்ளது.

    ”மேலும், மனிதகுலத்திற்கான நிலையான மற்றும் சிறந்த எதிர்காலத்திற்கான தீர்வுகளை உருவாக்க இளம் இந்தியர்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள இளைஞர்களுக்கு அதிகாரம் அளிக்கும் ஒரு நிறுவனத்தை உருவாக்குவது அவரது பார்வை” என்று பேசிய நீட்டா அம்பானி, இந்தியா மற்றும் உலகத்தின் முன்னேற்றத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும் அடுத்த தலைமுறை உலகளாவிய தலைவர்களை தயார்படுத்தும் ஒரு நிறுவனம் என்றும் ஜியோ இன்ஸ்டிடியூட்டை குறிப்பிட்டார்.

    மேலும், ‘ஜியோ இன்ஸ்டிட்யூட்டின் முதல் பேட்ச் என்பதால் நாம்  ஒன்றாக உருவாக்க நினைக்கும் அசாதாரண எதிர்காலத்திற்கான முதல் படியை நீங்கள் எடுப்பீர்கள்’ என்று மாணவர்களிடம் கூறிய நீட்டா அம்பானி, உங்கள் நாட்டின் எதிர்காலத்தை மட்டுமல்ல, நமது கிரகத்தின் எதிர்காலத்தையும் வடிவமைக்கும் ஆற்றலும் பொறுப்பும் உங்கள் ஒவ்வொருவருக்கும் உள்ளது! எனவே ஒவ்வொரு தருணத்தையும் முக்கியமானதாக ஆக்குங்கள், ஒவ்வொரு நாளையும் எண்ணுங்கள். ஆர்வத்துடன் கற்றுக்கொள்ளுங்கள். பயமின்றி கற்பனை செய்து பாருங்கள். நமது அதிநவீன ஆய்வகங்கள் மற்றும் நூலகங்களில் மூழ்குங்கள்.  உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு வசதிகளை அனுபவியுங்கள்’ என கூறினார்.
    Published by:Murugesh M
    First published:

    Tags: Jio, Nita Ambani

    அடுத்த செய்தி