நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர் ஜீவித்குமார் சாதனை - படிப்புக்கான உதவிகளை அரசு செய்யும் என ஆட்சியர் உறுதி

மாணவர் ஜீவித்குமாரின் படிப்புச் செலவிற்காக நிதி உதவி தேவைப்பட்டால் அரசு உதவி செய்யும் என ஆட்சியர் தெரிவித்தார்.

நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர் ஜீவித்குமார் சாதனை - படிப்புக்கான உதவிகளை அரசு செய்யும் என ஆட்சியர் உறுதி
மாணவர் ஜீவித்குமார்
  • Share this:
நீட் தேர்வில் இந்திய அளவில் அரசு பள்ளிகளின் தரவரிசையில் முதல் இடம் பிடித்த தேனி மாணவருக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு தெரிவித்தார். மேலும், மாணவரின் படிப்பிற்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு சார்பாக செய்து தரப்படும் என வும் உறுதியளித்தார்.

தேனி மாவட்டம்  தேவதானப்பட்டி அருகே உள்ள வாடிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மாணவர் ஜீவித்குமார், நீட் தேர்வில் இந்திய அளவில் அரசு பள்ளிகளின் தரவரிசையில் முதல் இடம் பிடித்துள்ளார்.

சில்வார்பட்டியில் உள்ள அரசு உதவிபெறும் மாதிரி பள்ளியில் படித்த இம்மாணவர் கடந்த ஆண்டு நீட்தேர்வு எழுதி தேர்ச்சி பெறவில்லை. இதனைத் தொடர்ந்து நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தனியார் கோச்சிங் சென்டரில் ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் உதவியுடன் படித்து, தற்போது இந்திய அளவில் அரசு பள்ளிகளின் தரவரிசையில் முதல் இடம் பிடித்துள்ளார்.


இதனைத் தொடர்ந்து மாணவர் ஜீவித் குமார் இன்று தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவை நேரில் சந்தித்தார். மாவட்ட ஆட்சியர் பாராட்டுக்கள் தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் நினைவு பரிசாக புத்தகத்தை வழங்கினார்.


பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆட்சியர் அரசு பள்ளி மாணவர் நீட் தேர்வில் முதலிடம் பிடித்துள்ளது மகிழ்ச்சி அளித்துள்ளது. இதே போல் மாணவர்கள் அனைவரும் நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். மேலும் மாணவர் ஜீவித்குமாரின் படிப்புச் செலவிற்காக நிதி உதவி தேவைப்பட்டால் அரசு உதவி செய்யும் என தெரிவித்தார்.
First published: October 17, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading