மத்திய அரசின் கல்வி நிறுவனங்ளான என்.ஐ.டி., ஐ.ஐ.டி. ஐ.ஐ.ஐ.டி. ஆகியவற்றில் உள்ள படிப்புகளில் சேருவதற்கு ஜே.இ.இ, தேர்வு நடத்தப்படுவது வழக்கம், அந்த வகையில் நடப்பாண்டு. ஜே.இ.இ. முதன்மைதேர்வு 4 கட்டங்களாக 13 மொழிகளில் நடத்தப்பட்டது.
அதன்படி, பிஇ. பிடெக் படிப்புகளுக்கான ஜே.இ.இ. முதன்மை தேர்வு பிப்ரவரி, மார்ச், ஜூலை, ஆகஸ்டு மற்றும் செப்டம்பர் மாதங்களில் நடத்தப்பட்டது. இந்த 4 கட்டங்களிலும் 10 லட்சத்து 48 ஆயிரத்து 12 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்தனர்.
அவர்களில் 9 லட்சத்து 29 ஆயிரத்து 8 பேர் பங்கேற்று தேர்வை எழுதினார்கள். தேர்வு 334 நகரங்களில் அமைக்கப்பட்டு இருந்த 925 மையங்களில் நடத்து முடிந்தது.
இந்த நிலையில் அவர்களுக்கான தேர்வு முடிவு நேற்று அதிகாலையில் வெளியாகி இருக்கிறது. தேர்வர்கள் jeemain.nta.nic.in என்ற இணையதளத்தில் சென்று தெரிந்துகொள்ளலாம். 4 கட்டங்களாக நடத்தப்பட்ட தேர்வில் கலந்துகொண்ட தேர்வர்கள் எதில் சிறந்த மதிப்பெண்ணை பெற்றார்களோ, அதை தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ) மதிப்பெண்ணாக வெளியிட்டு இருக்கிறது.
இதல் 100 சதவீத மதிப்பெண் பெற்ற 44 பேரின் பட்டியலை தேசிய தேர்வு முகமை வெளியிட்டு இருக்கிறது. அதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர் அஸ்வின் ஆபிரகாம் இடம்பெற்று இருக்கிறார். அதிகபட்சமாக டெல்லி, தெலுங்கானாவில் இருந்து தலா 7 மாணவர்கள் 100 சதவீத மதிப்பெண் பெற்றிருந்தனர்.
இதுதவிர, தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆர்.ரோஷனா என்ற மாணவி 99.99 சதவீத மதிப்பெண் பெற்று மாநில அளவிலான சிறந்த மதிப்பெண் பெற்ற பெண்கள் பட்டியலில் உள்ளார்.
இந்த தேர்வின் போது முறைகேடு நடவடிக்கைகளில் ஈடுபட்ட 20 பேருக்கு 3 ஆண்டுகளுக்கு தேர்வு எழுத தடைவிதக்கப்பட்டு இருக்கிறது. அதோடு அவர்களுடைய, தேர்வு முடிவும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Exam results, Jee