முகப்பு /செய்தி /கல்வி / JEE மெயின் தேர்வுக்கான ஆன்லைன் பதிவு இன்றோடு முடிய உள்ளது - எப்படி விண்ணப்பிப்பது?

JEE மெயின் தேர்வுக்கான ஆன்லைன் பதிவு இன்றோடு முடிய உள்ளது - எப்படி விண்ணப்பிப்பது?

 JEE மெயின் தேர்வுக்கான ஆன்லைன் பதிவு

JEE மெயின் தேர்வுக்கான ஆன்லைன் பதிவு

JEE Main 2022 Session 2 : முதல் கட்டத்திற்கு (JEE Main 2022 Session 1) விண்ணப்பித்த விண்ணப்பத் தாரர்கள் இரண்டாம் கட்டத்திற்கு (JEE Main 2022 Session 2) பழைய பதிவு எண் மற்றும் பாஸ்வர்ட் பயன்படுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.

  • Last Updated :

தேசிய தேர்வு முகமை (NTA) JEE Mains 2022க்கான 2ம் கட்டத்திற்கான விண்ணப்பப் படிவத்தை அதன் அதைகாரபூர்வ இணையதள பக்கத்தில் முன்னதாக வெளியிட்டது. விண்ணப்பதாரர்கள் ஜூன் 30 வரை JEE விண்ணப்பப் படிவத்தை நிரப்ப முடியும் என தெரிவிக்கப்பட்டிருந்து. இதற்க்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பத் தாரர்கள் இன்று இரவு 9 மணி வரை விண்ணப்பிக்கலாம். இன்றோடு அதற்கான கால அவகாசம் நிறைவடைகின்றது. எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என்பது கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

முதல் கட்டத்திற்கு (JEE Main 2022 Session 1) விண்ணப்பித்த விண்ணப்பத் தாரர்கள் இரண்டாம் கட்டத்திற்கு (JEE Main 2022 Session 2) பழைய பதிவு எண் மற்றும் பாஸ்வர்ட் பயன்படுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.

JEE MAIN 2022 : விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்

  •  10 kb முதல் 200 kb வரை, JPG/JPEG வடிவத்தில் வண்ணம் அல்லது கருப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் ஸ்கேன் செய்யப்பட்ட பாஸ்போர்ட் புகைப்படம் (passport photograph in either colour or black & white in JPG/JPEG format, between 10 kb to 200 kb)
  • JPG/JPEG வடிவத்தில் கையொப்பத்தின் ஸ்கேன் (signature) செய்யப்பட்ட நகல், 4 kb முதல் 30 kb வரை
  • category certificate ஸ்கேன் செய்யப்பட்ட நகல் pdf இல் 50kb முதல் 300kb வரை (தேவை எனில் )
  •  PwD சான்றிதழின் ஸ்கேன் செய்யப்பட்ட நகல் pdf இல் 50 kb முதல் 300 kb வரை, (தேவை எனில் )

JEE Main 2022 Session 2 இவ்விதமாக விண்ணப்ப படிவத்தை நிரப்புங்கள் :

  • முதலில் JEE முதன்மை இணையதளம் jeemain.nta.nic.in -க்குச் செல்லவும்.
  • இணையதளத்தின் முகப்புப் பக்கத்தில் உள்ள "Session 2 (two)
  • Registration for JEE(MAIN) 2022" இணைப்பைக் கிளிக் செய்யவும்.

  • விவரங்களைப் (Application No, Password , Security Pin as shown below )
  • பூர்த்தி செய்து Sigh IN என்பதைக் கிளிக் செய்யவும்.

    விண்ணப்பப் படிவத்தை நிரப்பவும்.

    தேவையான ஆவணங்களைப் பதிவேற்றி விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தவும்.

    இறுதியாக விண்ணப்ப படிவ நகலை எடுத்து வைத்துக்கொள்ளவும்.

விண்ணப்பக்கட்டணம்:

பொதுப் பிரிவினர்ரூ.600
SC/STரூ.350

இந்த பக்கத்தில் சென்று

https://examinationservices.nic.in/jeemain22/root/Home.aspx?enc=Ei4cajBkK1gZSfgr53ImFVj34FesvYg1WX45sPjGXBr6zOap+YI3RfHX0uXZk7IA

top videos

    காணவும்

    First published:

    Tags: Education, Jee