JEE மெயின் தேர்வு: மாணவர்களுக்கு இன்னொரு வாய்ப்பு!

ஐஐடி, என்ஐடி கல்வி நிறுவனங்களில் சேருவதற்கான ஜேஇஇ மெயின் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை நேற்று வெளியிட்டுள்ளது.

JEE மெயின் தேர்வு: மாணவர்களுக்கு இன்னொரு வாய்ப்பு!
மாதிரிப் படம்
  • Share this:
ஐஐடி, என்ஐடி கல்வி நிறுவனங்களில் சேருவதற்கான ஜேஇஇ மெயின் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை நேற்று வெளியிட்டது.

நாட்டின் உயர்ந்த பொறியியல் கல்வி நிறுவனங்களாக கருதப்படும் ஐஐடி, என்ஐடிகளில் சேருவதற்காக ஜேஇஇ தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கான தேர்வு கடந்த 8-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை நடத்தப்பட்டது. சுமார் 8.74 லட்சம் பேர் இத்தேர்வை எழுதினர். இந்நிலையில் ஜேஇஇ மெயின் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை நேற்று வெளியிட்டது.

இதில் 15 பேர் 100 சதவீதம் மதிப்பெண் பெற்றுள்ளனர். தேர்வு முடிவுகளை JEEMAIN.NIC.IN என்ற இணையத்தில் தெரிந்து கொள்ளலாம். இந்த தேர்வில் மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த துருவ் அரோரா முதலிடத்தை பிடித்தார்.



தற்போது ஜேஇஇ முதல் கட்ட தேர்வுக்கான மதிப்பெண் சதவீதம் மட்டுமே வெளியாகியுள்ளது. மாணவர்களுக்கான ரேங்க்  ஏப்ரல் மாதம் நடக்கும் இரண்டாம் கட்ட தேர்வுக்கு பிறகே அறிவிக்கப்படும். எனவே முதல்கட்ட தேர்வு சரியாக எழுதாதவர்கள் இரண்டாம் கட்ட தேர்வை எழுதி தேர்ச்சி பெற முயற்சிக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார்



ஜேஇஇ மெயின் இரண்டாம் கட்ட தேர்வு ஏப்ரல் மாதம் நடத்தப்படுகிறது. பிப்ரவரி 8-ம் தேதி முதல் மார்ச் மாதம் 7-ம் தேதி வரை மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

Also watch

First published: January 20, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்