ஐஐடி, என்ஐடி உள்ளிட்ட மத்திய உயர் கல்வி நிறுவனங்களில் பொறியியல் படிப்புகளில் சேர ஜேஇஇ நுழைவுத் தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது. இவை ஜேஇஇ மெயின், ஜேஇஇ அட்வான்ஸ்டு என இரண்டு கட்டங்களாக நடத்தப்படுகின்றன. மேற்குறிப்பிட்ட கல்வி நிறுவனங்களில் சேர ஜேஇஇ தேர்வுகளில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம்.
இந்த ஆண்டு ஜேஇஇ மெயின் 2021 தேர்வு 4 முறை ஆங்கிலம், இந்தி, தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. முதல் கட்டமாக கடந்த பிப்ரவரி மாதம் 23ம் தேதி முதல் 26ஆம் தேதி வரை தேர்வு நடைபெற்றது. அதைத் தொடர்ந்து மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களிலும் ஜேஇஇ மெயின் 2021 தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து மார்ச் மாதத்திற்கான தேர்வுகள் கடந்த 16ம் தேதி தொடங்கி 18ம் தேதி வரை நடைபெற்றது. மேலும், தேர்வு முடிந்த 6 நாட்களுக்குள் முடிவுகளை தேசியத் தேர்வுகள் முகமை வெளியிட்டுள்ளது. இதில், தமிழக மாணவர்கள் 13 பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளனர்.
இந்த நிலையில், ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள 3ம் அமர்வு தேர்வுக்கான பதிவுகள் ஆரம்பமாகியுள்ளன. முதல்நிலை தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறை மார்ச் 25ம் தேதி முதல் (வியாழக்கிழமை) தொடங்கியுள்ளது. JEE-ன் அதிகாரப்பூர்வ வலைத்தளமான jeemain.nta.nic.in என்ற இணையதளத்தை பார்வையிடுவதன் மூலம் ஒருவர் விண்ணப்பிக்கலாம். ஜேஇஇ மெயின் 2021 இன் மூன்றாவது அமர்வில் பங்கேற்க விரும்பும் ஆர்வலர்கள் ஏப்ரல் 4 அல்லது அதற்கு முன்னதாக விண்ணப்பிக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது.
ஏற்கனவே, பிப்ரவரி மற்றும் மார்ச் அமர்வுகளுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் தங்கள் மதிப்பெண்ணை மேம்படுத்த விரும்புவோர் JEE முதன்மை ஏப்ரல் 2021 அமர்வுக்கு விண்ணப்பிக்கலாம். நான்கு அமர்வுகளில் எத்தனை முறை வேண்டுமானாலும் மாணவர்கள் தேர்வு எழுதலாம் என்றும் எண்ணிக்கையில் வரம்பு இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த முயற்சிகளின் அடிப்படையிலும் அவர்கள் பெற்ற அதிக மதிப்பெண்களின் அடிப்படையிலும் மாணவர்கள் தரவரிசைப்படுத்தப்படுவார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது. சரி இப்பொது ஏப்ரல் மாத அமர்வுகள் தேர்வுகளுக்கு எப்படி விண்ணப்பிக்கலாம் என்பது குறித்து காண்போம்.
JEE மெயின் ஏப்ரல் 2021: விண்ணப்பிப்பது எப்படி?
1. ஜெஇஇ -ன் அதிகாரபூர்வ இணையதளமான jeemain.nta.nic.in லிங்கை ஓபன் செய்து அதில் உள்நுழைய வேண்டும்.
2. அதன் முகப்புப்பக்கத்தில், ‘JEE முதன்மை 2021: புதிய பதிவு மற்றும் பதிவு படிவ திருத்தம்’ (JEE Main 2021: New Registration and Registration Form Correction) என்ற விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும்.
3. அதன்பின்னர் நியூ ரெஜிஸ்டரேசன்-ஐ கிளிக் செய்து யூசர் ஐடி மற்றும் பாஸ்வோர்ட் ஆகியவற்றை உருவாக்கி பதிவு செய்ய வேண்டும்.
4. அடுத்தடுத்த நுழைவுக்கான லாகின் சான்றுகளைச் சேமித்து, விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்ய கன்டினியூ என்று கிளிக் செய்ய வேண்டும்.
5. பிறகு உங்கள் சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் கையொப்பத்தை குறிப்பிட்ட வடிவத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
6. தேர்வுக்கான பணம் செலுத்த அதில் கிடைக்கக்கூடிய விருப்பங்களிலிருந்து கட்டண பயன்முறையைத் தேர்ந்தெடுத்து விண்ணப்பக் கட்டணமாக ரூ.650 செலுத்தவும். பெண் வேட்பாளர்களுக்கான விண்ணப்பக் கட்டணம் 325 ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.
7. இறுதியாக பதிவு செய்த விண்ணப்ப படிவத்தைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
Also read... GATE தேர்வில் வெற்றிபெற்ற 67 வயது தமிழக பேராசிரியர் - யார் இவர்?
JEE முதன்மை ஏப்ரல் 2021 தேர்வு கணினி அடிப்படையிலான சோதனை முறையில் ஏப்ரல் 27ம் தேதி முதல் 30ம் தேதி வரை நாடு முழுவதும் பல மையங்களில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. BE / BTech க்கான JEE முதன்மை தேர்வில் கணிதம், இயற்பியல் மற்றும் வேதியியலில் இருந்து மொத்தம் 30 ஆப்ஜெக்ட்டிவ் டைப்- மல்டிபிள் சாய்ஸ் கேள்விகள் (MCQ) கேட்கப்படும். அதில் மாணவர்கள் ஏதேனும் 25 கேள்விகளுக்கு பதிலளித்தால் போதும். ஒவ்வொரு கேள்விக்கும் நான்கு மதிப்பெண்கள் வழங்கப்படும். மேலும் ஒவ்வொரு தவறான விடைக்கும் ஒரு மதிப்பெண் கழிக்கப்படும். இருப்பினும் எண் வகை கேள்விகளுக்கு, எந்த ஒரு நெகடிவ் மதிப்பெண்களும் இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில், B.Planning மற்றும் B.Arch படிப்புகளில் சேருவதற்கான பேப்பர் 2 நுழைவு தேர்வுகளுக்கான அடுத்த மே அமர்வில் நடைபெற உள்ளது. இது முன்னர் பிப்ரவரி அமர்விலும் நடத்தப்பட்டது. மேலும் இது கணிதம், திறனாய்வு சோதனை மற்றும் திட்டமிடல் கேள்விகள் / வரைதல் கேள்விகள் என மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இரண்டு பேப்பர்களும் அதிகபட்சமாக 400 மதிப்பெண்களைக் கொண்டிருக்கும். முதல் இரண்டு பாகங்கள் JEE Main B.Arch மற்றும் B.Plan 2021 தேர்வில் ஒரே மாதிரியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Jee