ஹோம் /நியூஸ் /கல்வி /

ஜே.இ.இ. நுழைவுத் தேர்வு - தமிழக அரசின் கோரிக்கை ஏற்ற தேசிய தேர்வு முகமை!

ஜே.இ.இ. நுழைவுத் தேர்வு - தமிழக அரசின் கோரிக்கை ஏற்ற தேசிய தேர்வு முகமை!

 மாதிரிப்படம்

மாதிரிப்படம்

JEE Main Exam Application form:

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஜே.இ.இ. நுழைவுத் தேர்வில் 10ம் வகுப்பு மதிப்பெண்களை பதிவு செய்வதில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிப்பதாக தேசிய தேர்வு முகமை (NTA) அறிவித்துள்ளது.

2023 ஆண்டுக்கான ஜேஇஇ தேர்வு விண்ணப்ப செயல்முறை கடந்த 15ம் தேதி தொடங்கியது. இதில், 10ம் வகுப்பில் ஒவ்வொரு பாடத்திலும் பெற்ற மதிப்பெண்களை பதவிடுமாறு கோரப்பட்டிருந்தது. கடந்த 2021ம் ஆண்டு, கொரோனா நோய்த் தொற்று காரணமாக தமிழ்நாட்டில்  10ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர். இவர்களுக்கு, மதிப்பெண்கள் எதுவும் வழங்கப்படவில்லை. எனவே, இந்த மாணவர்களால் தற்போது ஜேஇஇ தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாத சூழல் நிலவி வந்தது. எனவே, தமிழக மாணவர்கள் விண்ணப்பிக்கும் வகையில் விண்ணப்பப் படிவத்தை மாற்றி அமைக்கும் படி தமிழ்நாடு அரசியல் தலைவர்களும், கல்வியாளர்களும் கோரிக்கை வைத்து வந்தனர்.

இந்நிலையில், தமிழக மாணவர்கள் விண்ணப்பிக்கும் படி, விண்ணப்பப் படிவத்தத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

அதன்படி, தமிழ்நாடு கல்வி வாரிய பாடத்திட்டத்தின் கீழ் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் 10ம் வகுப்பு மதிப்பெண்கள்/சதவிகிதங்களை பூர்த்தி செய்யத் தேவையில்லை என்றும், 10ம் வகுப்பு மதிப்பெண் தொடர்பான கோரிக்கைகள் முழுவதும் செயலிழக்கப்பட்டுள்ளதாகவும் தேசிய தேர்வு முகமை  தெரிவித்துள்ளது.

இதையும் வாசிக்க: தமிழகத்தில் தனியார் பள்ளிகள் திறப்பு எப்போது? - வெளியான முக்கிய அறிவிப்பு..!

விண்ணப்பதாரர்களும் jeemain.nta.nic.in மற்றும் www.nta.ac.in இணையதளத்தின் மூலம் அவ்வப்போதைய  தகவல்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.

மேலும், 2023 ஜேஇஇ தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேர்வர்கள், தங்களது சந்தேகங்களுக்கு 011 - 40759000

011 - 69227700 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். மின்னஞ்சல் தொடர்புக்கு jeemain@nta.ac.in என்ற முகவரியை அணுகலாம்.

First published:

Tags: Jee