தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று, 2023 ஜேஇஇ தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு மட்டும் மதிப்பெண்களையோ தரவு நிலையோ பதிவு செய்வதில் இருந்து தேசிய தேர்வு முகமை விலக்கு அளித்திருப்பதாக தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று, தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ள அறிவிப்பில், 2020-21 கல்வியாண்டில் பத்தாம் முடித்த மாணவர்கள் இப்போது 2023 ஆம் ஆண்டு ஜே.ஈ.ஈ தேர்வுக்கு மதிப்பெண்களோ தரநிலையோ இல்லாமலேயே விண்ணப்பிக்கலாம் என தெரிவித்திருக்கிறது.
2020-21 கல்வியாண்டில், கொரோனா பெருந்தொற்றின் விளைவாக ஊரடங்கு நடைமுறையில் இருந்த காரணத்தால் தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு படித்த அனைவரும் தேர்வானதாக தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அப்போது அறிவித்தது. 'அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி என்று சான்றிதழ் வழங்கப்பட்டது.
இதையும் வாசிக்க: 8ம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய உதவித்தொகை தேர்வு அறிவிப்பு
இப்போது, குறிப்பிட்ட அந்த மாணவர்கள் பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வுகளை 2023ல் எழுதவுள்ளனர். ஜேஇஇ தேர்வுக்கு விண்ணப்பிக்கும்போது பத்தாம் வகுப்பு மதிப்பெண் அல்லது தரநிலை கேட்கப்பட்டது. தமிழ்நாட்டு மாணவர்கள் அதை பூர்த்தி செய்ய இயலாத நிலை இருந்து வந்தது. இதையடுத்து தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை தேசிய தேர்வு முகமைக்கு மதிப்பெண்களை அல்லது தரநிலையை பதிவு செய்வதில் இருந்து தமிழ்நாட்டு மாணவர்களுக்கு விலக்கு அளிக்கவேண்டும் எனக் கோரிக்கை விடுத்தது.
தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ள அறிக்கையில் ஜேஇஇ தேர்வுக்கு விண்ணப்பிப்பதில் மாணவர்களுக்கு ஏதேனும் சிரமங்கள் இருந்தால் 0112 40759000/011-69227700 ஆகிய எண்களை தொடர்புகொள்ளலாம் அல்லது jeemaina.ac.in என்கிற மின்னஞ்சலிலும் தொடர்புகொள்ளலாம் என அறிவித்திருக்கிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.