Home /News /education /

JEE (Main) 2022: முதல் அமர்வு ஜூன் மாதம் நடைபெறும் - தேசிய தேர்வு முகமை முக்கிய அறிவிப்பு

JEE (Main) 2022: முதல் அமர்வு ஜூன் மாதம் நடைபெறும் - தேசிய தேர்வு முகமை முக்கிய அறிவிப்பு

மாதிரி படம்

மாதிரி படம்

JEE (Main) 2022: ஏப்ரல் மாதத்தில் திட்டமிடப்பட்ட முதலாவது பிராதான தேர்வு, ஜூன் 20-ல் தொடங்கி ஜூன் 29ம் தேதி வரை 9 நாட்களில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களின் கோரிக்கையை ஏற்று, 2022 ஆண்டுக்கான ஜேஇஇ முதன்மை தேர்வு (JEE Main) தேதியில் தேசிய தேர்வு முகமை திருத்தம் செய்துள்ளது.

இதனையடுத்து, ஏப்ரல் மாதத்தில் திட்டமிடப்பட்ட முதலாவது பிராதான தேர்வு, ஜூன் 20ம் தேதி தொடங்கி 29ம் தேதி வரை 9 நாட்களுக்கு ஒரு நாளைக்கு 2 ஷிஃப்டுகளில் - காலை 09:00 முதல் 12:00 மணி வரை, பிற்பகல் 3 :00 மணி முதல் மாலை 6 வரை - தேர்வு நடைபெறும்.

மே மாதத்தில் திட்டமிடப்பட்ட இரண்டாவது பிரதான   தேர்வு, ஜூலை 20ம் தேதி தொடங்கி  மே 30ம் தேதி வரை  10  நாட்கள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2022 JEE Main exam Postponed


 

2022 ஜேஇஇ மெயின் தேர்வு:

தேசிய தொழில்நுட்ப கழகங்கள் மற்றும் பல பொறியியல் கல்லூரிகள் இளநிலை பொறியியல் படிப்புகளுக்கு அனுமதி பெறுவதற்கு ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இந்த முறை பல்வேறு மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

கடந்தாண்டை போல் இல்லாமல், தற்போது இரண்டு முறைகள் மட்டுமே ஜேஇஇ மெயின் தேர்வு நடத்தப்படுகிறது. 2021 கொரோனா பெருந்தொற்று காலத்தில் மாணவர்களின் மன உளைச்சலை குறைக்கும் வகையில் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே என நான்கு முறைகள் தேர்வு நடத்தப்பட்டன.

மாணவர்கள் தங்கள் வசதிக்கேற்ப ஒன்று அல்லது நான்கு மாதங்களிலும் தேர்வை எழுதினர். இதில், மாணவர்கள் பெற்ற அதிகபட்ச மதிப்பெண் அடிப்படையில் தரவரிசையில் பட்டியல் தயாரிக்கப்பட்டது.

நீட் - விண்ணப்பம் தொடக்கம்.. தேர்வு எழுதும் நேரம் அதிகரிப்பு!!

இந்த கல்வியாண்டில் முதல் ஏப்ரல், மே ஆகிய இரண்டு மாதங்கள் மட்டுமே தேர்வு நடைபெறும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்த காலகட்டங்களில் 12ம் வகுப்பு வாரியத் தேர்வுகள் நடைபெறும் என்பதால், மாணவர்கள் ஜேஇஇ முதன்மை தேர்வை தள்ளிவைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தனர். இதனையடுத்து, தேசிய தேர்வு முகமை, ஜூன், ஜூலை மாதங்களில் தேர்வை நடத்த முடிவெடுத்துள்ளது.

மாதிரிப்படம்


விண்ணப்ப செயல்முறை:  

ஜூன் மாதத்தில் நடைபெறும் முதலாவது பிரதான தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பம் செயல்முறை ஏப்ரல் 5ம் தேதியுடன் முடிவடைந்து விட்டது.

இரண்டாவது மாதத்துக்கான விண்ணப்ப செயல்முறை குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வுமுறை: 

கடந்த ஆண்டின் பாடத்திட்டமே தொடரும். ஆனால், தாள் - Iல் உள்ள இரண்டு பகுதிகளுக்கும் (MCQ & Numerical Value Type Questions) நெகடிவ் மதிப்பெண் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மொத்தம் கேட்கப்படும் 90 கேள்விகளிலிருந்து (இயற்பியியல், வேதியியல் மற்றும் கணிதத்தில் தலா 30 கேள்விகள்) மாணவர்கள் ஏதேனும் 75 கேள்விகளுக்கு (இயற்பியியல், வேதியியல் மற்றும் கணிதத்தில் தலா 25 கேள்விகள்) பதில் அளிக்கும் வகையில் தேர்வு முறை இருக்கும்.

அவ்வப்போதைய நிலவரங்களைத் தெரிந்து கொள்வதற்கு, மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும், இங்கு கொடுக்கப்பட்டுள்ள இணையதளங்களைப் பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். jeemain.nta.nic.in மற்றும் www.nta.ac.in

10, 11, 12-ம் வகுப்புகளுக்கு குறைக்கப்பட்ட பாடத்திட்ட அடிப்படையிலேயே பொதுத்தேர்வு - தமிழக அரசு தேர்வுத்துறை இயக்குனர்

வேறு ஏதேனும் விளக்கம் தேவைப்பட்டால், மாணவர்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம். 011-40759000/011 - 69227700. jeemain@nta.ac.in என்ற மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளலாம்.
Published by:Salanraj R
First published:

Tags: Education, Entrance Exam, Jee

அடுத்த செய்தி