முகப்பு /செய்தி /கல்வி / JEE (Main) 2022: ஜேஇஇ மெயின் தேர்வு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு

JEE (Main) 2022: ஜேஇஇ மெயின் தேர்வு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

கடந்தாண்டை போல் இல்லாமல், இரண்டு முறைகள் மட்டுமே ஜேஇஇ மெயின் தேர்வு தற்போது நடத்தப்படுகிறது.

  • Last Updated :

பெற்றோர் மற்றும் மாணவர்களின் வேண்டுகோள்களை  ஏற்று, 2022 ஆண்டுக்கான ஜேஇஇ முதன்மைத் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பம் தாக்கல் செய்யும் தேதியை தேசிய தேர்வு முகமை நீட்டித்துள்ளது.

தற்போதைய தேதிகள்: மார்ச் 1 முதல் மார்ச் 31 வரை

மாற்றியமைக்கப்பட்ட தேதிகள்: மார்ச் 1 முதல் ஏப்ரல் 5 வரை.

NEET Exam

2022 ஜேஇஇ மெயின் தேர்வு:  

தேசிய தொழில்நுட்ப கழகங்கள் மற்றும் பல பொறியியல் கல்லூரிகள் இளநிலை பொறியியல் படிப்புகளுக்கு அனுமதி பெறுவதற்கு  ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இந்த முறை பல்வேறு மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

கடந்தாண்டை போல் இல்லாமல், தற்போது இரண்டு முறைகள் மட்டுமே ஜேஇஇ மெயின் தேர்வு நடத்தப்படுகிறது. கொரோனா பெருந்தொற்று காலத்தில் மாணவர்களின் மன உளைச்சலை குறைக்கும் வகையில் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே என நான்கு முறைகள் தேர்வு நடத்தப்பட்டன.

மாணவர்கள் தங்கள் வசதிக்கேற்ப ஒன்று அல்லது நான்கு மாதங்களிலும் தேர்வை எழுதினர். இதில், மாணவர்கள் பெற்ற அதிகபட்ச மதிப்பெண் அடிப்படையில் தரவரிசையில் பட்டியல் தயாரிக்கப்பட்டது.

ஆனால், தற்போது ஏப்ரல், மே ஆகிய இரண்டு மாதங்கள் மட்டுமே தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  ஏப்ரல் 16,17,18,19,20, 21 ஆகிய 6 நாட்களுக்கு ஒரு நாளைக்கு 2 ஷிஃப்டுகளில் - காலை 09:00 முதல் 12:00 மணி வரை, பிற்பகல்  3 :00 மணி முதல் மாலை 6 வரை - தேர்வு நடைபெறும். 

இரண்டவாது முறையாக மே மாதத்தில் 24,25,26,27,28,29 ஆகிய 6 நாட்களில் ஜேஇஇ மெயின் தேர்வு நடைபெறும்.

கடந்த ஆண்டின் பாடத்திட்டமே தொடரும். ஆனால், கடந்தாண்டைப் போல் அல்லாமால், தாள் - Iல் உள்ள இரண்டு பகுதிகளுக்கும் (MCQ & Numerical Value Type Questions) நெகடிவ் மதிப்பெண் தற்போது  அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

TANCET 2022 பதிவு செயல்முறை – எப்படி விண்ணப்பிப்பது..!

மொத்தம் கேட்கப்படும் 90 கேள்விகளிலிருந்து (இயற்பியியல், வேதியியல் மற்றும் கணிதத்தில் தலா 30 கேள்விகள்) மாணவர்கள் ஏதேனும் 75 கேள்விகளுக்கு (இயற்பியியல், வேதியியல் மற்றும் கணிதத்தில் தலா 25 கேள்விகள்) பதில் அளிக்கும் வகையில் தேர்வு முறை இருக்கும். தவறான பதிலுக்கு மதிப்பெண் குறைக்கப்படும்.

அவ்வப்போதைய நிலவரங்களைத் தெரிந்து கொள்வதற்கு, மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும், இங்கு கொடுக்கப்பட்டுள்ள இணையதளங்களைப் பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். jeemain.nta.nic.in மற்றும் www.nta.ac.in

SSC CGL Admit Card: எஸ்எஸ்சி ஒருங்கிணைந்த பட்டதாரி தேர்வுக்கான அட்மிட் கார்டு வெளியானது

வேறு ஏதேனும் விளக்கம் தேவைப்பட்டால், மாணவர்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம். 8287471852, 8178359845, 9650173668, 9599676953, 8882356803.

First published:

Tags: Jee