முகப்பு /செய்தி /கல்வி / JEE Main தேர்வு முடிவுகள் வெளியீடு

JEE Main தேர்வு முடிவுகள் வெளியீடு

JEE Main தேர்வு முடிவுகள் வெளியீடு

JEE Main தேர்வு முடிவுகள் வெளியீடு

jeemain.nta.nic.in இணையதளத்தில் முடிவுகளை வெளியிட்டது தேசிய தேர்வு முகமை.

  • Last Updated :

நாடு முழுவதும் கடந்த ஆகஸ்ட் 26,27, 31 & செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் நடைபெற்ற 4-ம் கட்ட JEE Main தேர்வு முடிவுகள் வெளியானது. jeemain.nta.nic.in இணையதளத்தில் முடிவுகளை வெளியிட்டது தேசிய தேர்வு முகமை.

நாடு முழுவதும் இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் ஐ.ஐ.டி என்.ஐ.டி ஆகியவற்றில் சேர்ந்து படிப்பதற்கு ஜே.இ.இ. நுழைவுத்தேர்வு ஒவ்வொரு ஆண்டும் 4முறை நடத்தப்படுகிறது. முதன்முறையாக தெலுங்கு கன்னடம் மலையாளம் தமிழ் உள்ளிட்ட 11 மொழிகளிலும் இந்த ஆண்டு முதன்மைத் தேர்வுகள் நடத்தப்பட்டன.

பொறியியல் படிப்புகளுக்கான ஜே.இ.இ.பிரதான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. நாடு முழுவதும் உள்ள இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படிப்பதற்கு ஜே.இ.இ. நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. கொரோனா காரணமாக இந்தாண்டு நான்கு கட்டங்களாக நடத்தப்பட்ட தேர்வு, கடந்த 2ம் தேதி நிறைவுபெற்றது.

சுமார் ஏழு லட்சத்து 32 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில், அதன் முடிவுகளை தேசிய தேர்வு முகமை நள்ளிரவில் வெளியிட்டது. அதன்படி ஆந்திரா, தெலங்கானா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த 18 மாணவர்கள் முதன்மை இடத்தை பிடித்துள்ளனர். 44 மாணவர்கள் நூறு சதவீத மதிப்பெண்களை பெற்றுள்ளனர். ஜே.இ.இ.அட்வான்ஸ் தேர்வு அக்டோபர் மூன்றாம் தேதி நடைபெறவுள்ளது. பிரதான தேர்வில் முதல் இரண்டரை லட்சம் இடங்களை பிடித்த மாணவர்கள் மீண்டும் அட்வான்ஸ்ட் தேர்வை எழுதவுள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

top videos
    First published:

    Tags: Jee